2025 வரலட்சுமி விரதம் எப்பொழுது? அன்று செய்யவேண்டிய வழிபாடுகள்
ஆடி மாதம் வழிபாட்டிற்கு உரிய மிக சிறந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் பல்வேறு விசேஷ சிறப்பு வழிபாடுகள் மேற்க்கொள்ளப்படும். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கிய நிகழ்வில் ஒன்றாக வரலக்ஷ்மி விரதம் இருக்கிறது.
இந்த விரதம் பெண்களால் அனுஷ்டிக்கப் படும் ஒரு முக்கியமான விரதம் ஆகும். இந்த விரதத்தை மேற்கொண்டு வழிபாடு செய்து வந்தால் நாம் மஹாலட்சுமி தேவியின் முழு அருளைப் பெறலாம். அப்படியாக, இந்த ஆண்டு 2025 வரலக்ஷ்மி விரதம் எப்பொழுது? அன்று செய்ய வழிபாட்டு முறைகள் பற்றி பார்ப்போம்.
விரதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக வரலக்ஷ்மி விரதம் இருக்கிறது. அன்றைய தினத்தில் நாம் மனம் உருகி மகாலட்சுமியை வழிபாடு செய்து வந்தால் நமக்கு மகிழ்ச்சியும் செல்வமும், சிறப்பான ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதிலும் குறிப்பாக பெண்கள் வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளும் பொழுது அவர்கள் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும் என்பதால் காலம் காலமாக பெண்கள் தவறாமல் குடும்ப நலனுக்காக வரலட்சுமி விரதம் இருந்து வழிபாடு செய்து வருகிறார்கள்.
மேலும், இந்த விரதத்தை வரலட்சுமி நோம்பு, மாங்கல்ய நோன்பு, சுமங்கலி விரதம் என்பது உள்ளிட்ட பல பெயர்களின் மக்கள் குறிப்பிடுகிறார்கள். எவர் ஒருவர் வரலட்சுமி விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு அஷ்டலட்சுமிகள் எனப்படும் எட்டு லட்சுமிகளின் அருள் கிடைக்கும்.
அதேப்போல், வரலட்சுமி விரதம் இருந்து வழிபாடு செய்தால் அஸ்வமேத யாகம் நடத்தியதற்கு இணையான பலன் கிடைக்கும். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்பட உள்ளது. அதாவது பெளர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் இந்த லட்சுமி பூஜை நடத்தப்பட உள்ளது.
இந்த வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் அன்றைய நாளில் சில கவசம் வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள். சிலர் மகாலட்சுமியின் திருஉருவ படத்தை வைத்து மட்டும் வழிபாடு செய்யும் வழக்கம் வைத்திருப்பார்கள்.
மேலும், அன்றைய தினம் மகாலட்சுமியின் 108 திருநாமங்களை சொல்லும் லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி மற்றும் ஸ்ரீ சுக்தம் பாராயணம் செய்து வழிபாடு செய்வது மிகப்பெரிய நன்மை வழங்கும்.
அதோடு, வீட்டிற்கு பெண்களை அழைத்து அவர்களுக்கு குங்குமம், மங்கள பொருட்கள், தாம்பூலம் ஆகியவற்றைக் கொடுத்து, வயதில் மூத்த பெண்கள் கைகளால் நோம்பு கயிறு கட்டிக் கொண்டு, அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.
எவர் ஒருவர் வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு மஹாலட்சுமி தாயாரின் முழு அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அதோடு, குடும்பத்தில் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பொருளாத சிக்கல்கள், கடன் பிரச்சனை இவை அனைத்தும் விலகி நிம்மதி உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







