அடுத்தவர்களிடம் எதையும் எதிர்பாராமல் உதவும் குணம் படைத்த 3 ராசிகள்
இந்த உலகத்தில் நாம் பலரும் மிகவும் சுயநலமாக இருப்பதை பார்க்கமுடியும். ஒருவரிடம் பழகுகிறார்கள் என்றால் கட்டாயம் ஏதேனும் எதிர்பார்ப்புகளோடு பழகும் குணம் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் ஒருவரிடம் பழகும் பொழுது எதையும் எதிர்பார்க்காமல் தன் அன்பையும், தன்னால் முடிந்த உதவியும் செய்து வாழும் சில மனிதர்களும் இருக்கிறார்கள். அப்படியாக, ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு குறிப்பிட்ட சில ராசிகள் அடுத்தவர்களிடம் எதையும் எதிர்பாராமல் மிகுந்த அன்போடு பழகும் ராசிகளாக இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் அன்பை அள்ளிக் கொடுப்பதில் சிறந்தவர்கள். இவர்களுக்கு நெருக்கமானவர்களை மிகுந்த அன்போடு பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் தான் அன்பும் செலுத்தும் நபரிடம் எதையும் எதிர்பார்க்காமல் பழகும் குணம் உடையவர்கள். இவர்களின் அன்புக்குரியவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். உணர்வு ரீதியாக யாரேனும் உடைந்து நின்றால் அவர்களுக்கு முதலில் சென்று உதவி செய்பவராக கடக ராசிக்காரர்கள் இருப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் எப்பொழுதும் நீதி நேர்மையை கடைப்பிடிப்பவர்கள். இவர்களும் யாருக்கும் அநீதி செய்யமாட்டார்கள். அதேப்போல் அடுத்தவர் அநீதி இழைத்தாலும் அதைப் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் அடுத்தவர்களுடைய பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணாதவர்கள். இவர்கள் ஒருவர் துன்பத்தில் இருக்கின்றார்கள் என்றால் தன்னலம் அற்று உதவி செய்வார்கள். இவர்கள் யாராக இருப்பினும் மிகவும் பண்போடு பழகக்கூடியவர்கள்.
மீனம்:
மீன ராசியினர் எப்பொழுதும் இரக்க குணம் அதிகம் இருக்கும். இவர்களிடத்தில் யாரேனும் தான் துன்பத்தில் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டால் எதையும் பாராமல் உதவும் குணம் படைத்தவர்கள். இவர்கள் எல்லோரிடத்திலும் நாம் சரியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இவர்கள் மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்யமாட்டார்கள். அதேப்போல் பிறரிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் மிகுந்த கவனத்துடன் பேசுவார்கள். யாரும் தன் வார்த்தையால் காயம் அடைந்து விடக்கூடாது என்று நினைப்பவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







