ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை யாருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும்?

By Sakthi Raj Feb 24, 2026 10:00 AM GMT
Report

ஜோதிடத்தில் செவ்வாய் சனி சேர்க்கை ஒரு முக்கியமான சேர்கையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய் சனி இந்த சேர்க்கை பெற்றவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சியாகவோ, உச்சமாகவோ அமர்ந்து விட்டால் அந்த இணைவு அவர்களுக்கு யோகமாகத்தான் வேலை செய்யும்.

அதிலும் குறிப்பாக இந்த சேர்க்கையில் சனி திசையோ அல்லது செவ்வாய் திசையோ நடைபெற்றால் அந்த ஜாதகருக்கு மிகுந்த யோகத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கும். இதில் மகர ராசியில் இந்த இணைவை ஏற்படுகிறது என்றால் அங்கு சனி ஆட்சியாகவும் செவ்வாய் உச்சமாகவும் இருக்கும்.

இந்த இணைவு இருவரும் வக்கிரமாகாமல் இருந்து தசை நடந்தால் அது மிகுந்த யோகமாக செயல்படுகிறது. மேலும், மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சியாகவும் சனி நீசமாகவும் இருக்கும். இந்த இணைப்பு இருந்து திசை நடந்தாலும் யோகமாகவே மாறும்.

ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை யாருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும்? | Sani Sevvai Serkai Prediction In Horoscope

2026-ல் வரப்போகும் சனிப்பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார்?

2026-ல் வரப்போகும் சனிப்பெயர்ச்சி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் யார்?

மேலும், மேஷ ராசியில் இந்த சேர்க்கை நிறைய சொத்துக்கள் வாங்குபவர்களாக இருப்பார்கள். அதிகாரமிக்க பதவிகளும் வசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். உணவு, பொருள் பாதுகாப்பு, எரிபொருள் துறையில் வேலை பார்ப்பவராக இருப்பார்கள். ஆனால் சீக்கிரம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

மேலும் வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லும் பலருக்கும் சனி செவ்வாய் சேர்க்கை இருப்பதை நாம் காணலாம். இந்த சேர்க்கை என்பது இரண்டு கிரகங்களும் இணைந்து இருப்பது மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும் யோகம் தான்.

 கும்பராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருந்தால் இவர்கள் பெரிய நிறுவனங்களை வழிநடத்தக்கூடிய பொறுப்புகள், பதவிகள் இவர்களுக்கு தேடி வரும். மகர ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருந்தால் கடுமையான உழைப்பால் பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பலருக்கும் வேலை கொடுக்கக்கூடிய முதலாளியாக இருப்பார்கள்.

ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை யாருக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும்? | Sani Sevvai Serkai Prediction In Horoscope

2026 மார்ச் மாதம் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகிறதாம்

2026 மார்ச் மாதம் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகிறதாம்

இந்த மகரம் கும்பம் வீட்டில் சனி செவ்வாய் இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தும் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். இந்த சேர்க்கை பெற்றவர்கள் ஒரு அலுவலகத்தில் இருந்து வேலையை விட்டு வந்து விட்டால் கூட பல காலங்களுக்கு அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும்.

இவர்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க கூடியவர்களாக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடியவர்களாக மாறுகிறார்கள். அதனால் சனி செவ்வாய் என்றவுடன் மோசமான பலனை தான் கொடுக்கும் என்று எண்ணாமல் அதை ஆராய்ந்து பார்த்தால் நமக்கு உண்மை புரியவரும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US