நாளைய ராசி பலன் (25-02-2026)
மேஷம்:
இன்று நீங்கள் திடீர் பயணம் செல்ல வாய்ப்புகள் உள்ளது. மனதில் பல குழப்பங்களும் சிந்தனையும் உருவாகும். வேலை பளு அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம்.
ரிஷபம்:
நீங்கள் வீடு நிலம் வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். வேலை ரீதியாக சோர்வு உண்டாகலாம். மதியம் மேல் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்:
நீண்ட நாள் பிரச்சனை முடிவிற்கு வரும். குடும்பத்துடன் ஆலய வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். பண விஷயங்களில் கவனம் வேண்டும்.
கடகம்:
உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். தொழில் ரீதியாக பின்னடைவு உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். பிள்ளைகள் எதிர்காலத்திற்கு தேவையானதை செய்துக் கொடுப்பீர்கள்.
சிம்மம்:
இன்று எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். முடிந்த வரை உண்மை பேசி உங்கள் பணிகளை செய்யுங்கள். மருத்துவ துறையில் பெரிய உயரம் தொடுவீர்கள். அரசு வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
கன்னி:
இன்று தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். கடன் சுமை குறையும். பொழுது போக்கு விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நன்மையான நாள்.
துலாம்:
மன சோர்வு விலகும் நாள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய முயற்சிகள் பெரிய அளவில் உங்களுக்கு கைக்கொடுக்கும். உங்களை தவறாக புரிந்தவர்கள் விலகி செல்வார்கள்.
விருச்சிகம்:
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முக்கியமான முடிவுகள் எடுப்பார்கள். வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு:
உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுவீர்கள். மனம் ரீதியாக சந்தித்த பிரச்சனைகள் விலகும். சொத்து விவகாரத்தில் இருந்த குழப்பம் விலகும் நாள்.
மகரம்:
புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும். இன்று தேவை இல்லாத பணி சுமை உங்களை வந்து சேரும். சிலர் புத்தகம் விரும்பி படிப்பீர்கள். மாலை மேல் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள்.
கும்பம்:
எதிரிகளால் இருந்த பிரச்னை விலகும். காதல் வாழ்க்கையில் மிகுந்த கவனம் வேண்டும். சொந்தங்களால் சந்தித்த மன கசப்புகள் விலகி செல்லும். வருமானம் உயர்த்துவதை பற்றி ஆலோசிப்பீர்கள்.
மீனம்:
குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தங்கம் வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். திருமண பேச்சுக்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |