இன்றைய ராசி பலன்(31-07-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு வேலையில் புது புது வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும். இன்று முக்கியமான சில முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம்.
ரிஷபம்:
இன்று வியாபாரத்தில் முழு ஈடுபாடு செலுத்துவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சிலருக்கு முகம் தெரியாத நபரால் சில உதவிகள் கிடைக்கலாம். நன்மையான நாள்.
மிதுனம்:
இன்று சிக்கனமாக செலவு செய்வதால் நன்மை அடையலாம். சொந்தங்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் விருந்தினர் வருகையால் நன்மை உண்டாகும்.
கடகம்:
இன்று குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மன அமைதி பெற உங்களுக்கு பிடித்த விஷயங்கள் செய்வது நல்லது. உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
சிம்மம்:
இன்று வண்டி வாகனத்தில் மிகுந்த கவனம் தேவை. ஆரோக்கியம் சிறப்பாக அமைய சில உணவு கட்டுப்பாடுகள் தேவை. சகோதரி வழி உறவால் ஆதாயம் அடைவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கன்னி:
முடிந்த வரை தேவை இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகி செல்லும். திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் சரி ஆகும்.
துலாம்:
மனதில் நம்பிக்கை பிறக்கும். வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் திறமைக்கு ஏற்ப பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பாராத மாற்றங்கள் நடைப்பெறும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கடன் கொடுத்த பணம் கைக்கு வரும். சில பிரச்னை முடிவிற்கு வரும்.
தனுசு:
இன்று மாணவர்கள் படிப்பில் கவன சிதறல் உண்டாகலாம். பழைய நட்புகளை சந்தித்து மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
மகரம்:
நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். மனக்குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வழிபாட்டில் பங்கேற்பீர்.
கும்பம்:
பணிபுரியும் இடத்தில் சில பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் உடன் இருப்பவர் செயல்படுவர். இன்று கோபம் வேண்டாம். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
மீனம்:
இன்று வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நினைத்த காரியத்தில் வெற்றி அடையும் நாள். நட்பு வட்டாரம் விரிவடையும். முக்கிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







