2025 ஜூலை மாதத்தோடு இந்த ராசிகளின் கெட்ட காலம் முடிகிறதாம்- எந்த ராசிகளுக்கு தெரியுமா?
2025 ஜூலை மாதம் நிறைவடைகிறது. அப்படியாக, யாரெல்லாம் வாழ்க்கையில் குடும்பப் பிரச்சனை, பணப்பிரச்சனை, தொழில் பிரச்சனை என்று சந்தித்து வருகிறார்களோ அவர்களுக்கு நல்ல மாற்றம் பிறக்க போகிறதாம்.
அதற்காக ஜூலை மாதம் மிகவும் மோசமான மற்றும் சவாலான மாதம் என்று சொல்லி விடமுடியாது, இருப்பினும் இந்த ஜூலை மாதத்தில் ஜோதிடத்தில் பல கிரக மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது. அதாவது, ஜூலை 28 ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் நுழைந்து உள்ளார்.
இதற்கு முன்னதாக செவ்வாய் கேதுவுடன் சிம்ம ராசியில் இருந்ததால் பலரும் அதிக அளவிலான குடும்பப் பிரச்சனைகள் மற்றும் பணப் பிரச்சனைகள் சந்தித்து இருப்பார்கள். அவை எல்லாம் இந்த ஜூலை மாதத்தோடு நல்ல முடிவைப் பெறப்போகிறது.
அப்படியாக, இந்த செவ்வாய் கிரக மாற்றத்தால் எந்த ராசிகளின் கஷ்ட காலம் விலகி மனதில் புத்துணர்ச்சி பிறக்கப் போகிறது என்று பார்ப்போம்.
ரிஷபம்:
இவர்கள் இத்தனை நாள் சந்தித்த மனக்கஷ்டங்கள் எல்லாம் விலகி நிம்மதி பிறக்கப்போகிறது. பொருளாதார பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். அதேப்போல், குடும்ப உறவுகளில் சிக்கல் மற்றும் மன அழுத்தம் சந்தித்தவர்களுக்கு அந்த பதட்டம் குறைந்து மகிழ்ச்சி பிறக்கும்.
மிதுனம்:
கடந்த சில மாதங்களாக சந்தித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு பிறக்க உள்ளது. வேலையில் புதிய வாய்ப்புகளும், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல நாள் முடிவிற்கு வராது என்று எண்ணிய பிரச்சனை நல்ல முடிவைப் பெரும். வாழ்க்கையில் புதிய பாதை உருவாகும்.
கன்னி:
சொந்த வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி உருவாகும். இரண்டாவது திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் கடந்த சில தினங்களாக உடல் நிலையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு அந்த பிரச்சனை எல்லாம் நல்ல முடிவைப் பெறப் போகிறது. திருமண வாழ்க்கையில் நல்ல புரிதல் உண்டாகும். நவம்பர் மாதம் வரை கும்ப ராசிக்காரர்களுக்கு அமோகமான நேரம் காத்திருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டால் நல்ல முன்னேற்றம் அடையலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







