நீங்கள் எந்த தெய்வத்தின் அம்சம் கொண்டவர்கள் என்று தெரியுமா?
ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதம் 12 மாதங்களில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் இருக்கும். அதேப்போல்,12 மாதத்தில் பிறந்தவர்களும் ஒவ்வொரு தெய்வத்தின் அம்சம் நிறைந்தவராக இருக்கிறார்கள்.
அதாவது 12 மாதமும் ஒவ்வொரு தெய்வத்தின் அம்சத்தையும், ஆற்றலையும் அதிகம் கொண்டதாக இருக்கும். அப்படியாக, எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த தெய்வத்தின் அம்சம் கொண்டவர்கள் என்று பார்ப்போம்.
1. ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் விநாயகரின் அம்சம் நிறைந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலியாகவும் வாழ்க்கையில் எதையும் விடா முயற்சியுடனும் சாதிக்கும் திறமைக் கொண்டவர்கள்.
2. பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் குபேரனின் அம்சம் நிறைந்தவர்கள். இவர்கள் எப்பொழுதும் மிகுந்த செல்வாக்கோடும், செல்வத்தோடும் வாழக்கூடியவர்கள். மேலும், இவர்கள் மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
3. மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் முருகப் பெருமானின் அம்சத்தை கொண்டவர்கள். இவர்களிடத்தில் வேகமும் விவேகமும் அதிகம் நிறைந்து இருக்கும். தன்னம்பிக்கை அதிகம் நிறைந்தவராக காணப்படுவார்கள்.
4. ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள் தேவ முனி நாரதரின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடத்தில் சிறந்த பேச்சு திறமையும், பிறரை வழிநடத்தும் ஆளுமையும் கொண்டு இருப்பார்கள்.
5. மே மாதத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியின் அம்சம் நிறைந்தவர்கள். இவர்களிடத்தில் அதிக தைரியமும், மன உறுதியும் இருக்கும்.
6. ஜூன் மாதம் பிறந்தவர்கள் மகாலட்சுமியின் அம்சத்தை கொண்டவர்கள். இவர்களிடத்தில் வசீகரமான தோற்றமும் இருக்கும். இவர்கள் கலை துறையில் சிறந்து விளங்குவார்கள்.
7. ஜூலை மாதம் பிறந்தவர்கள் சூரிய பகவானின் அம்சம் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களிடத்தில் சிறந்த தலைமைத்துவ பண்புகள் இருக்கும். இவர்கள் ஆளுமையால் பெரிய விஷயங்களை சாதித்து விடுவார்கள்.
8. ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் துர்கை அம்மனின் அம்சத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடத்தில் வீரம் அதிகம் இருக்கும். தோல்வியே சந்தித்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெறுவார்கள்.
9. செப்டம்பர் மாதம் பிறந்தவர்கள் அனுமனின் அம்சம் கொண்டவர்கள். இவர்களை நம்பி எந்த ஒரு செயலையும் செய்யலாம். இவர்களிடத்தில் அதிக தைரியமும், விஸ்வாசமும் நிறைந்து இருக்கும். இவர்கள் மிக சிறந்த உழைப்பாளியாக இருப்பார்கள்.
10. அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் கிருஷ்ண பகவானின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள்.
11. நவம்பர் மாதம் பிறந்தவர்கள் கும்பகர்ணனின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் உணர்வு ரீதியாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.
12. டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் சிவ பெருமானின் அம்சம் பெற்றவர்கள். இவர்களிடத்தில் அதிக அளவிலான தன்னம்பிக்கை காணப்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







