ஆடிப்பெருக்கு 2025: பெண்கள் அன்று மறந்தும் இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீர்கள்
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பெருக்கு மிகவும் முக்கியமான விசேஷ நாளாகும். அன்றைய நாளில் நாம் வழிபாடு செய்வதோடு தானம் தர்மங்கள் செய்ய மிக சிறந்த நாளாகும். அப்படியாக, அன்றைய நாளில் நாம் என்ன விஷயங்கள் செய்யலாம்? என்ன விஷயங்கள் செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டிற்கு உரிய மிக சிறந்த நாளாகும். அந்த மாதம் முழுவதும் அனைத்து அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றி கொண்டாடும் நிகழ்வுகள் நடக்கும். அதோடு விவசாயிகள் பாரம்பரியமாக ஆடி பட்டம் விதைப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
பொதுவாக, ஆடி மாதத்தில் மழை காலம் தொடங்கும் நாள் என்பதால் அன்றைய மாதம் மழை பெய்து ஏரி, குளம் உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் வழிபாடு செய்து நடத்தும் முக்கிய திருவிழா ஆகும்.
இவ்வாறு ஆடி மாதத்தில் பெய்யும் மழையால் ஆறுகள் நிறைந்து வரும் நிலையில், ஆடி 18ஆம் தேதியன்று ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுவது. இந்த அடிப்பெருக்கை அடுத்து திருமணம் ஆன புதுமண தம்பதிகள் நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி வழிபாடு செய்யும் வழக்கமும் வைத்திருக்கிறார்கள்.
மேலும், ஆடிப்பெருக்கு நாளில் நாம் என்ன விஷயங்கள் செய்தாலும் அவை பலமடங்கு பலன் தரும் என்பது நம்பிக்கை. அதனால், இந்த நாளில் சுப காரியங்களை தொடங்குவது, புதிய பொருட்களை வாங்குவது மற்றும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அதோடு, ஆடி மாதத்தில் நாம் புதிய முயற்சிகள் செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள் இருந்தாலும், ஆடிப்பெருக்கு அன்று அனைத்து சுப காரியங்களை செய்யலாம் என்ற ஐதீகம் உள்ளது. அப்படியாக, ஆடிப்பெருக்கு நாளில் நாம்முக்கியமான சில விஷயங்கள் செய்ய மறக்கக்கூடாது என்கிறார்கள்.
அதில் முக்கியமாக ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் பூஜை செய்பவர்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து வைக்க மறக்க கூடாது. அதோடு, வீடுகளில் விளக்கு ஏற்றி வைத்த பின்பு அம்பாளுக்கு கட்டாயம் நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
ஆடிப்பெருக்கு அன்று வீட்டில் குறையாமல் சில பொருட்கள் இருக்க வேண்டும். அவை ஆடிப்பெருக்கு நாளிற்கு முன்னதாகவே வாங்கி நிரப்பிக் கொள்ள வேண்டும். அவை அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் வற்றல், எண்ணெய் ஆகியவற்றை ஆகும்.
கடைசியாக ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டிய முக்கியமான பொருள் குண்டு மஞ்சள் ஆகும். பலரும் ஆடிப்பெருக்கு நாளில் பொன் பொருள் வாங்கி மகிழ்வார்கள்.
காரணம் ஆடிப்பெருக்கு நாளில் வாங்கும் பொருள் பல மடங்கு உயரும் என்பது நம்பிக்கை. ஆனால், பொன் பொருள் வாங்க முடியாதவர்கள் கட்டாயம் குண்டு மஞ்சள் வாங்கி வழிபாடு செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







