உங்கள் வீட்டை அடிக்கடி கருடன் வட்டமிடுகிறதா? இது தான் காரணமாம்
வைணவ வழிபாட்டில் பெருமாளின் வாகனமான கருட பகவானுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பெருமாள் எத்தனையோ வாகனங்களில் எழுந்தருளிக் காட்சி கொடுத்தாலும், அவர் கருட வாகனத்தில் அமர்ந்து காட்சி அளிப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
மேலும், கருட வாகனத்தில் பெருமாளை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படியாக, பெருமாளின் வாகனமான கருடனை வானத்தில் வட்டமிட்டபடி பார்ப்பதும் மிக சிறப்பானதாகும்.
அந்த வகையில் கருடன் நம் வீடுகளை வட்டமிடப்படி இருந்தால் அதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக, கருடன் நம் வீடுகளை வட்டமிட்டபடி கண்களில் படுகிறது என்றால் நம் தலையெழுத்தே மாறப்போகிறது என்று அர்த்தமாம். மேலும், அதிகாலை கருடனை சூரிய உதயத்தின் போது தரிசித்தால் நாம் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
அதேப்போல், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக போராடி கொண்டு இருக்கிறீர்கள் என்றால் கட்டாயம் கருடாழ்வார் வழிபாடு நல்ல வளர்ச்சியை கொடுக்கும். அதோடு கருட பகவானுக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்யும் பொழுது நாம் நினைத்த காரியத்தை எளிதில் அடையும் வலிமை பிறக்கிறது.
கருட மந்திரம்:
"ஓம் நமோ பகவதே, கருடாய: காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா"
நாம் கருட மந்திரம் சொல்லி வழிபாடு செய்யும் பொழுது விஷங்களால் ஏற்படும் ஆபத்துகள், நாகதோஷம், மறைமுக எதிரிகள் தொல்லை இவை அனைத்தும் விலகும். கருடாழ்வாரை வேண்டி வழிபாடு செய்யும் பொழுது அவர் நமக்காக பெருமாளிடம் நம் வேண்டுதல் நிறைவேற கோரிக்கை வைப்பதாக ஐதீகம்.
அதனால் நாம் கருடாழ்வாரை வழிபாடு செய்ய விரைவில் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மேலும், கருடாழ்வாரை வழிபாடு செய்வதற்கான மிக சிறந்த நாளாக வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திரம் ஆகியவை உள்ளது.
அதேப்போல், சுவாதி நட்சத்திரம் வரும் நாட்களில் மாலை நேரத்தில் கருடனை தரிசிப்பது மிவும் சிறப்பானது. ஏழரை சனி, கண்ட சனி பாதிப்புகளால் துன்பம் அடைபவர்கள் பஞ்சமி திதியில் கருடனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வதால் சனியின் கேடு பலன்கள் குறைந்து தோஷங்கள் விலகும்.
அதோடு, கோயில்களில் நாம் பிரார்த்தனை முடித்து வெளியே வரும் பொழுது கருட தரிசனம் காண்பது கோடி புண்ணியம் வழங்கும். அவ்வாறு வழிபாடு முடித்து கோயிலில் வட்டமிடும் கருடனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தால் நாம் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







