நினைத்தது நிறைவேற ஆடிச்சுற்று வழிபாடு- ஒரு முறை ஆடியில் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்
52 சக்தி பீடங்களில் சங்கரன்கோவிலில் அமையப்பெற்று இருக்கும், கோமதி அம்மன் ஆலயம் ஒன்று. இங்கு ஆடி மாதத்தில் பன்னிரண்டு நாட்கள் ஆடித் தபசு திருநாள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
அதாவது, நேற்றைய தினமான (28.07.2025) கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழா, அடுத்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கோமதி அன்னையின் ஆடித்தபசு நிகழ்வுடன் நிறைவடைகிறது. இந்த நிகழ்வின் மிகவும் விஷேசம் என்னவென்றால் ஆடிச்சுற்று தான்.
சுமார் 12 நாட்கள் நடைப்பெறும் இந்த ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்ய பல ஊர்களில் இருந்து வழிபாடு செய்ய வருகை தருவார்கள்.
அதில் பக்தர்கள் சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்மன் சன்னிதிகளை உள்ளடக்கிய இக்கோயிலின் வெளிப்பிராகாரத்தை பல பக்தர்கள் அவர்கள் வேண்டுதல் நிறைவேற 108 முறை சுற்றுவதுதான் ‘ஆடிச்சுற்று’ எனப்படுவதாகும்.
இதில் வெளியூர்களில் இருந்து வருகை தந்து தங்கி இருந்து அவர்கள் வேண்டுதல் நிறைவேற ஆடிச்சுற்று செய்கிறார்கள். மேலும், ஆடித்தபசு திருவிழாவிற்குள் இந்த ஆடிச்சுற்றை முடித்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலில் வீற்றியிருக்கும் அம்பாள் ஒரு காலில் நின்ற தவசு புரிந்தது போல, பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒரு காலில் நின்று வழிபட்டு கோயிலை சுற்றி வந்து அம்மனின் அருளை வேண்டி வழிபடுகிறார்கள்.
மேலும், ஆடிச்சுற்றை பக்தர்கள் 101, 501, 1001 என்ற எண்ணிக்கையுடன் சுற்றி வந்து வழிபடுகிறார்கள். இந்த ஆடிச்சுற்றின் மூலம் ஒரு காலில் நின்று தபசு காட்டி அருளும் அம்பாளின் கால் வலியை தாங்கள் ஏற்பதாக பக்தர்களின் நம்பிக்கை.
அதேப்போல், அம்பாளும் இப்படி தனது கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை போக்கி மகிழ்ச்சி அருள்கிறார் என்பது ஐதீகம். இந்த ஆடிச்சுற்று மேற்கொண்டு பக்தர்கள் பலரும் அவர்கள் வேண்டியதை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகத்தில் ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த ஆடித் தபசு திருவிழா நடத்தப்படுகிறது. ஆடித் தபசு நாளில் அம்பிகையையும் சங்கர நாராயணரையும் வழிப்பட்டால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







