2025 விநாயகர் சதுர்த்தி: இன்று ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்?
தடைகளை அகற்றி வாழ்க்கையில் வெற்றியை வழங்கக் கூடியவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடி வருகின்றோம். அப்படியாக 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆனது ஆகஸ்ட் 27 ஆம் அன்று கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஜோதிடத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி தினம் அன்று குறிப்பிட்ட சில 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் திடீர் ஜாக்பாட் அடிக்கும் யோகம் உருவாகப் போகிறது என்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
மேஷம்:
விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் இந்த மேஷ ராசி ஒன்று. இவர்கள் இந்த விநாயகர் சதுர்த்தி நாள் முதல் வாழ்க்கையில் ஒரு சில திருப்பங்களை சந்திக்க இருக்கிறார்கள். இத்தனை நாள் குழப்பங்களாக இருந்த காரியங்கள் இவர்களுக்கு நல்ல தெளிவையும் முடிவையும் கொடுக்கப் போகிறது. வேலையில் முன்னேற்றத்தை விநாயகப் பெருமானின் அருளால் பெறப்போகிறார்கள்.
மிதுனம்:
புதன் பகவானின் அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்கள் விநாயகர் சதுர்த்தி தினம் முதல் இவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்புமுனை காத்திருக்கிறது. மனதில் உள்ள குழப்பங்களுக்கு இவர்கள் விடை பெறுவார்கள். சில முக்கியமான முடிவுகளை விநாயகப் பெருமானின் அருளால் சரியாக எடுத்து வெற்றி காண போகிறார்கள். அரசியல் மற்றும் அரசு பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் பெறக்கூடிய சூழல் உருவாகப் போகிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நபர்கள் விநாயகர் சதுர்த்தி முதல் விநாயகப் பெருமானின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் சில துணிச்சலான முடிவுகளை எடுத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற போகிறார்கள். இவர்கள் விநாயகர் பெருமானை பற்றிக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தினால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள் யாவும் விலகி பெயரும் புகழும் கிடைக்கும். மிக முக்கியமாக இவர்களுக்கு மனதில் எதையும் சாதிக்க கூடிய தைரியம் பிறக்கும்.
கும்பம்:
நீண்ட நாட்களாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று குழம்பிக் கொண்டிருக்கும் கும்ப ராசிக்கு விநாயகப் பெருமானின் அருளால் ஒரு தெளிவான முடிவை எடுத்து அந்த காரியத்தை செய்யக்கூடிய பலம் கிடைக்கப் போகிறது. எதிரிகளை திசை தெரியாமல் ஓட விடும் பொன்னான காலமாக அமையப் போகிறது. திருமணத்தில் தாமதத்தை சந்தித்தக் கூடியவர்கள் விநாயகரை வழிபாடு செய்தால் அவர்களுக்கு கட்டாயம் நல்ல வரன் அமைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







