புதாதித்ய ராஜயோகம்: தங்க புதையலை எடுக்க காத்திருக்கும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் தங்களுடைய இடத்தை மாற்றிக் கொண்டு இருக்கின்றது. கிரகங்களுடைய இந்த மாறுதலால் 12 ராசிகளுக்கும் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு அவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
அப்படியாக ஆகஸ்ட் 30 அன்று புதன் சூரிய பகவானுடன் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்க உள்ளார். இதனால் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசியினர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த காரியம் நடக்க இருக்கிறது. வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் சரியாகும். குடும்பத்தில் இவர்களுடைய மதிப்பு உயரும். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும் காலகட்டமாகும். சிலருக்கு வங்கியில் கேட்ட கடன் உதவி எளிதாக கிடைக்கக்கூடும். வண்டி, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த யோகமானது அவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை உண்டு செய்ய காத்திருக்கிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை சந்திக்க போகிறார்கள். உடன் பிறந்தவர்கள் இவர்களுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். அலுவலகத்தில் இவர்களுக்கான மதிப்பு உயர போகிறது.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த மாற்றம் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்க காத்திருக்கிறது. இவர்கள் திருமண வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகப்போகிறது. ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம் நடக்கலாம். தாய் வழி சொத்துக்கள் உங்கள் உங்களிடம் வந்து சேரும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்:
நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத வேலை நல்ல முடிவைப் பெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் எந்த தடையும் இன்றி நடக்கும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். பொருளாதார சிக்கல் விலகி உங்களின் பண தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணம் உங்களுக்கு எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கும். குடும்பங்களுடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







