துன்பத்திலிருந்து உடனடியாக விடுபட கிருஷ்ணர் சொல்லும் 5 முக்கிய அறிவுரை தானம்

By Sakthi Raj May 19, 2026 07:18 AM GMT
Report

இந்த உலகத்தில் ஒருவருக்கு நண்பனாக, ஆசிரியராக, தந்தையாக, தாயாக என்று எல்லா இடத்திலும் துணையாக நின்று வழிநடத்தக்கூடிய தெய்வமாக கிருஷ்ண பகவான் இருக்கிறார். அப்படியாக, மகாபாரத யுத்தத்தில் குருஷேத்திரப் போர் நடந்து கொண்டிருந்தது அப்பொழுது பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீத உபதேசம் செய்தார்.

அவை அர்ஜுனனுக்கு மட்டும் செய்த உபதேசம் அல்ல அது நம்முடைய வாழ்க்கையில் இந்த உலகம் அழியும் வரை எல்லா மக்களுக்கும் சொல்லக்கூடிய ஒரு உபதேசமாகவே அமைந்திருந்தது. அந்த வகையில், நம் துன்பத்திலிருந்து விடுபட கிருஷ்ண பகவான் செல்லக்கூடிய ஐந்து முக்கிய அறிவுரை தானம் பற்றி பார்ப்போம்.

துன்பத்திலிருந்து உடனடியாக விடுபட கிருஷ்ணர் சொல்லும் 5 முக்கிய அறிவுரை தானம் | 5 Advise From Lord Krishna To Lead Happy Life 

1.நம்முடைய வாழ்க்கையில் திடீர் என்று ஒரு சில போராட்டம் தொடங்கிவிடும். அதனால், அர்ஜுனனை பார்த்து கிருஷ்ண பகவான் சொல்கிறார், அர்ஜுனா வாழ்க்கையில் போராட்டங்கள் நிகழும் பொழுது அதனை பற்றி அதிக அளவு யோசிக்காதே! எல்லா போராட்டங்களும் நாம் வெற்றியை அடைவதற்கானது அல்ல நம்மை வலிமையாக்குவதற்காகவே அவை அமைகிறது என்கிறார்.

2. உங்களுடைய வாழ்க்கையில் ஒரு விஷயத்திற்கு கடினமான உழைப்பும் உண்மையான அர்ப்பணிப்பும் செய்கிறீர்கள் என்றால் காலம் கடந்தாவது அதற்குரிய பலனை பெற்றுவிடலாம் என்கிறார்.

3. மனிதனுக்கு ஒரு இயல்பான குணம் உண்டு. இருப்பதை விடுத்து இல்லாததை எதிர்நோக்கி புலம்பி கொண்டிருப்பான். அப்படியாக, உறவுகள் என்றாலே அங்கு விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

துன்பத்திலிருந்து உடனடியாக விடுபட கிருஷ்ணர் சொல்லும் 5 முக்கிய அறிவுரை தானம் | 5 Advise From Lord Krishna To Lead Happy Life

ஆக, நம்மை விட்டு பிரிந்த நபர்களை நினைத்து ஏங்கி வருந்துவதை காட்டிலும் யாரும் இல்லாத காலத்திலும் நமக்காக உடன் இருந்தவர்களை உணர்ந்து அவர்களுக்கு நேரம் செலவிட வேண்டும் என்கிறார்.

4. எந்த ஒரு உறவுகளிடம் நாம் பழகும் பொழுது மன அமைதி இல்லையோ அந்த உறவுகள் நீண்ட நாள் நிலைக்காது என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

5. வாழ்க்கை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆக, கால சூழ்நிலையால் நாம் கீழே விழுந்த பொழுதிலும் அதிலிருந்து மீண்டு எழுவதற்கான வலிமை நம் மனதிலேயே இருக்கிறது. அதை உணர்ந்து மீண்டும் எழுந்து போராடி ஜெயிக்க வேண்டும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US