ஆடி மாதத்தில் இந்த 5 விசேஷ தினங்களை மட்டும் கட்டாயம் தவற விடாதீர்கள்
ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் விசேஷமான தினம் என்றாலும் குறிப்பிட்ட இந்த ஐந்து நாட்கள் மட்டும் மிகவும் விசேஷமானதாக இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
ஆடிப்பெருக்கு: (ஆடி 18)
தமிழ்நாட்டில் காவிரி கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் கூடி ஆடிப்பெருக்கு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். அதாவது நீர் வளத்தை போற்றும் விதமாகவும் விவசாயம் செழிப்பாக வளரவும் குடும்பத்தினுடைய நல் வாழ்க்கைப் பெருகவும் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

ஆடிப்பூரம்:
ஆடிப்பூரம் அம்பாளுக்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் அம்மன் கோவில்களில் வளையல் சாற்றுதல், கூழ் படைத்தல் போன்ற வழிபாடுகள் நடைபெறும். ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பதற்கு மிக உகந்த நாள். இராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் புனித நீராடி வழிபாடு மேற்கொள்வார்கள்.
ஆடி வெள்ளி மற்றும் ஆடி செவ்வாய்:
ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் மிகச் சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த நாளில் அம்மன் வழிபாடு செய்வதும் குலதெய்வ வழிபாடு செய்வதும் மிக உகந்ததாக இருக்கிறது. மேலும், மாரியம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

வரலட்சுமி விரதம்:
ஆடி மாதத்தில் பெண்கள் தவறக்கூடாத முக்கியமான நாட்களில் வரலட்சுமி விரதமும் ஒன்று. சுமங்கலி பெண்கள் தங்களுடைய கணவர்களுடைய ஆரோக்கியம் பெருகவும் குடும்பத்தினுடைய மகிழ்ச்சி நிலைக்கவும், ஐஸ்வர்யம் பெருகவும் இந்த வருடத்தை கடைபிடிப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |