2025: நாளை சந்திர கிரகணம் முடிந்து இந்த 5 விஷயங்களை மட்டும் செய்ய தவறாதீர்கள்
கிரகணம் என்பது இந்து மதத்தில் மிக முக்கியமாக பார்க்கக்கூடிய ஒரு விஷயமாகும். மேலும் ஒரு ஆண்டுக்கு சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் நிகழ்கிறது. கிரகணம் அறிவியல் ரீதியாக நடக்கக்கூடிய விஷயம் என்றாலும் அதை ஆன்மீக ரீதியாகவும் நாம் மிக முக்கியமாக பார்க்கின்றோம். மேலும் கிரகண காலங்களில் நிகழும் இயற்கை மாற்றங்கள் மனிதர்கள் வாழ்வில் பல தாக்கத்தை ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள்.
கிரகண நேரங்களில் பெரும்பாலும் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அந்த நேரங்களில் சில விஷயங்களை செய்யக்கூடாது எனவும் சொல்வதுண்டு. இந்த 2025 ஆம் ஆண்டின் கடைசி கிரகணம் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று நாளை நிகழ்வுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 9:59 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி அதிகாலை 1.37 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த கிரகணம் இரவு நேரங்களில் நிகழ உள்ளது என்றாலும் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று பகல் ஒரு மணியிலிருந்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி அன்று அதிகாலை கிரகண சாந்தி பூஜை முடித்த பிறகு வழக்கமான பூஜைகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் முடிந்த பிறகு நாம் குறிப்பாக சில 5 விஷயங்கள் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
கிரகணம் முடிந்து செப்டம்பர் 8ஆம் தேதி அன்று காலை எழுந்து குளித்து விட வேண்டும். குளிக்கும் நீரில் கல் உப்பு மஞ்சள் வேப்பிலை கலந்து கொள்வது நன்மை உண்டாகும். பிறகு கல் உப்பு மஞ்சள் கலந்த நீரால் வீடு மற்றும் பூஜை அறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
அதோடு பூஜை அறையில் இருக்கின்ற சுவாமி படங்களுக்கும் மஞ்சள் கலந்த நீரைக் கொண்டு துடைத்துவிட்டு வீடுகளில் ஏதேனும் முக்கிய தீர்த்தங்கள் இருந்தால் அவை பூஜை அறையில் தெளித்து கொள்ளலாம். மேலும், வீடுகளில் வேல் வைத்திருப்பவர்கள் அதற்கு பால் சந்தனம் மஞ்சள் நீர் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
அதேபோல் வீடுகளில் இருக்கக்கூடிய வாகனங்களையும் சுத்தமான நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு தர்மங்கள் செய்வது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. அதனால் கிரகணம் முடிந்து மறுநாள் பால் அரிசி தானியங்கள் போன்றவை தானம் செய்யலாம். இவ்வாறு செய்வது கிரகண பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து நன்மை அருள்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







