இந்த 6 மந்திரத்தை தினமும் பாராயணம் செய்தால் 8 வகையான செல்வங்களை பெறலாம்

By Sakthi Raj May 17, 2026 08:25 AM GMT
Report

 மனிதர்களுடைய வாழ்க்கையில் இறைவழிபாடு என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. அப்படியாக நாம் இறைவழிபாட்டோடு சேர்த்து இறைவனுடைய மந்திரங்களை பாராயணம் செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கிறது.

அப்படியாக, இந்த மந்திரங்களை நாம் தினமும் பாராயணம் செய்து வந்தால் எட்டு வகையான செல்வங்களையும் பெறலாம். அதாவது புத்திர பாக்கியம், குடும்பத்தில் சந்தோஷம், பூரண ஆயுள் மற்றும் நல்ல வேலை போன்றவை நமக்கு கிடைக்கிறது.

மேற்கண்ட எல்லாம் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியாக அமைந்துவிட்டாலே அவன் வாழ்க்கையில் பாதி நிம்மதியை பெற்று விடுவான். அப்படியாக இவையெல்லாம் நாம் பெறுவதற்கு தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்களை பற்றி பார்ப்போம்.

மந்திரம்: 1

 முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்,
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்,
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்,
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

மந்திரம்: 2

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

மந்திரம்: 3

ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

மந்திரம்: 4

அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்,
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்,
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்,
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்,

மந்திரம் :5

நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்,
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்,
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்,
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்,

மந்திரம் 6:

மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்,
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்,
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்,
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

இந்த ஆறு மந்திரங்களையும் தினமும் ஒருவர் தவறாமல் பாராயணம் செய்து வரும்பொழுது விநாயக பெருமானின் அருளால் வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் விலகும் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US