இந்து மதத்தில் 8 வகையான திருமணங்கள் உள்ளதாம் ? என்ன தெரியுமா ?
மனிதர்களுடைய வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக திருமணம் இருக்கிறது. மேலும் திருமணம் ஒவ்வொருவர் வாழ்க்கையில் புதிய தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த திருமணம் ஒரு மிகப்பெரிய ஆச்சர்யத்தை நமக்கு கொடுக்கிறது.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து ஆனால் இருவருக்கும் இடையே ஒரு பந்தம் ஏற்பட்டு காலம் முழுவதும் அவர்களுடன் வாழ்க்கையை கழிப்பது என்பது நமக்கு விதி என்று ஒன்றை முழுமையாக நம்ப செய்கிறது. அந்த வகையில் திருமணங்கள் ஒவ்வொரு ஊருக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்றபடி நடக்கும். அப்படியாக இந்து மதத்தில் திருமணங்கள் மொத்தம் எட்டு வகைகளில் இருக்கிறது. அதைப்பற்றி பார்ப்போம்.

1. பிரம்ம விவாகம்:
இந்த திருமணம் மணமகன் மற்றும் மணமகள் கல்வித்தரம், குடும்பம், குண நலன்கள் போன்றவை வைத்து நடைபெறுகிறது. இந்த குடும்பத்தில் மணமகளின் தந்தை ஒரு நல்ல படித்த வேலைக்கு செல்கின்ற மணமகனுக்கு தங்களுடைய குழந்தையை மணமுடித்துக் கொடுப்பார்.
அதை போல் மணமகனும் ஒரு நல்ல குடும்பப் பின்னணியில் இருந்து வரக்கூடிய பெண்ணை திருமணம் செய்து கொள்வார். ஆனால் இங்கு எந்த ஒரு வரதட்சணை போன்றவை இல்லாமல் இருமனம் சேரக்கூடிய ஒரு திருமணமாக இருக்கும்.
2. தெய்வ விவாகம்:
தெய்வ விவாகம் என்பது புரோகிதருக்கு பெண்ணை மனம் முடித்து கொடுப்பதாகும். அதாவது அவர்களுக்கு தட்சணையை கொடுப்பதற்கு பதிலாக அவர்களுடைய பெண்ணை அந்த குடும்பத்தினர் அந்த புரோகிதருக்கு மனம் முடித்துக் கொடுப்பார்கள். இது குறிப்பாக திருமண செலவுகளை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இந்த வகையில் திருமணம் முடித்துக் கொடுப்பதை நாம் பார்க்கலாம்.
3. அர்ஷ விவாகம்:
இந்த திருமணத்தில் இரு மனம் இணைவதோடு சேர்ந்து சில பொருட்களும் பரிமாற்றப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த திருமணத்தில் முனிவர்களுக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பார்கள். அதோடு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் பொழுது இரண்டு மாடுகள் வாங்கி கொடுத்து திருமணம் செய்வார்கள்.
4. ப்ரஜபத்ய விவாகம்:
இந்த திருமணத்தில் மணமகளின் தந்தை தன்னுடைய பெண்ணிற்கு தகுந்த மாப்பிள்ளை தேடிச் செல்வார். அதே போல் மணமகனின் தந்தை தன்னுடைய பையனுக்கு ஏற்ற பெண்ணை தேடி செல்வார்கள்.

5. அசூர் விவாகம்:
இந்த திருமணத்தில் மணமகன் உடைய குடும்பம் மணமகளின் குடும்பத்திற்கு பொன் பொருட்களை கொடுத்து அந்த மணமகளை விலைக்கு வாங்குவது போல் திருமணம் செய்து கொள்வார்கள். ஆதலால் இந்த திருமணத்தில் பல நேரங்களில் மணமகளின் விருப்பங்களை கேட்பதில்லை.
6. கந்தர்வ விவாகம்:
இந்த திருமணம் இந்த காலத்தில் நடக்கக்கூடிய காதல் திருமணம் போன்றது. மணமகன் மற்றும் மணமகளுக்கு பிடித்திருந்தால் போதும் என்று இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். பெற்றோர்களுடைய சம்மதத்திற்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுத்து கேட்க மாட்டார்கள்.
7. ரக்ஷாஸ் விவாகம்:
இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் குடும்பத்துடன் மணமகன் சண்டையிட்டு திருமணம் செய்து கொள்வார். முக்கியமாக பெண்ணின் சம்மதம் இல்லாமல் இந்த திருமணம் நடைபெறுகிறது.
8. பிஷாஷ் விவாகம்:
இந்த திருமணத்தில் மணப்பெண்ணை மயக்கி அல்லது அவளை தூக்கிக்கொண்டு திருமண முடித்துக் கொள்வார்கள். இல்லை என்றால் அந்த பெண்ணை அடித்து ஊனமாக்கியாவது அவளை திருமணம் செய்து கொள்வார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |