இறைவனை அடைய உதவும் 8 வழி முறைகள்
இறைவன் அவனை அடைவது என்பது சாதரண விஷயம் அல்ல. அதே போல், நம்முடைய வாழ்க்கை சுழலும் அதற்கு அவ்வளவு எளிதாக வழிவிடுவதும் இல்லை. பலரும், இறைவனை வயது மூப்பிற்கு பிறகே தேடி செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், சிறு வயதில் இருந்தே அவனை சரண் அடைவது தான் வாழ்க்கையில் வெற்றி அடைய உதவியாக அமையும். அப்படியாக, இறைவனை சரண் அடைய 8 முறைகள் இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.
1.யமம்:
அதாவது தீய குணங்களை விடுத்து, சத்தியத்தை கடைபிடித்து, எவர் பொருளுக்கும் ஆசை கொள்ளாமல், காமத்தை அடக்கி, திருட்டுகளில் ஈடுபடாமல் இருப்பது ஆகும்.
2. நியமம்:
நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தி அடைதல். மனதையும் உடலையும் சுத்தமாக வைத்தல். கடவுளை நினைத்து தவம் மேற்கொள்ளுதல். வேதாந்த நூல்களை படித்தல், எல்லாம் இறைவன் செயல் என்று வாழ்தல் ஆகும்.
3. ஆசனம்:
நம்முடைய உடலை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைப்பது ஆகும். பத்மாசனம் போன்ற ஆசனங்கள் செய்து உடலை வலமாக வைத்து கொள்ளுதல்.
4. பிராணாயாமம்:
இது மனிதன் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு மூச்சு பயிற்சி ஆகும். இதை செய்வதால், உடலும் மனமும் தெளிவு அடையும். தேவை இல்லாத சிந்தனைகள் நம்மை நெருங்குவதில்லை.
5. பிரத்தியாகாரம்:
மனம் போகும் இடம் எல்லாம் போகாமல், நல்லவை கெட்டவையை சரியாக ஆராய்ந்து பார்த்து செயல்படுவது.
6. தாரணை:
எப்பொழுதும் தெய்வ சிந்தனையோடு இருப்பது.
7. தியானம்:
மனம் அவனை மட்டுமே சரண் அடைய வழி தேடுவது. எந்த நிலையிலும் இறைவன் ஒருவனையே சிந்தித்து கொண்டு இருப்பது ஆகும்.
8. சமாதி:
இறைவனை உணர்ந்தும், நேரில் கண்டும் ஆனந்தம் அடைதல்.
இந்த 8 முறைகளும் அஷ்டாங்க யோகம் என்பார்கள். இவை இறைவனை அடையும் வழி மட்டும் அல்லாமல், நல்லொழுக்கமாக வாழவும், செய்யும் காரியங்களில் வெற்றி பெற உதவும் முக்கிய வழிகளாகும்.
இதில் இருக்கும் 8வது நிலை தான் மனிதன் பல ஆண்டுகள் தவம் இருந்து அடையவேண்டும் என்று என்னும் ஆனந்தம் ஆகும். அந்த ஆனந்தம் என்னும் வெற்றியை அடைய கட்டுப்பாடாக இந்த 8 வழிமுறைகள் பின்பற்ற நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி தான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |