2026: 9 கிரகமும் உச்சம் பெறப்போகும் 4 ராசிகள் - நினைத்ததை சாதிக்கலாமாம்
2026-ஆம் ஆண்டு கால புருஷ தத்துவப்படி மிகவும் வலிமையான ஆண்டாகப் பார்க்கப்படுகிறது. ஜூன் 2, 2026 அன்று குரு பகவான் கடக ராசிக்குச் செல்வது (குரு உச்சம்), சனி பகவான் மீன ராசிக்கு மாறுவது எனப் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன.

கடகம்
அறிவாற்றல் மற்றும் தலைமைப் பண்பை மேம்படுத்தும். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மிகச் சிறப்பானது. எதிர்பாராத உயர்மட்டப் பதவிகள், முதல்வர் ஆகும் அளவிற்கு செல்வாக்கு உயர வாய்ப்புள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
விருச்சிகம்
முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் எடுக்கும். அரசு வழியில் மிகப்பெரிய லாபங்கள் கிடைக்கும். கட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் மக்கள் செல்வாக்கு பெருகும். சொத்து சேர்க்கை மற்றும் பணப்புழக்கம் அபரிமிதமாக இருக்கும்.
மீனம்
தலைமைப் பொறுப்பு அல்லது ஆளுநர் போன்ற பதவிகள் தேடி வரும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
ரிஷபம்
எதிர்ப்புகளைத் துவம்சம் செய்து முன்னேறுவீர்கள். ஆளுமைத் திறன் கூடும். அரசு அதிகாரிகளுக்கும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கும் வாய்ப்புகள் குவியும்.