ஆடி மாதத்தில் நாம் செய்யவேண்டிய முக்கியமான 10 விஷயங்கள்
உலகத்தில் எல்லா நாளும் சிறப்பான நாள் தான்.அப்படி இருக்க தமிழ் மாதம் ஒவ்வொரு மாதத்திலும் ஆன்மீக ரீதியாக பல சிறப்புகள் இருக்கிறது.
அதிலும் ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்று எல்லோரும் தெரிந்தது. நாம் இப்பொழுது ஆடி மாதத்தில் நாம் கடை பிடிக்கவேண்டிய முக்கியமான 10 விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
1.அதாவது ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் நாம் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.
2.மேலும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருபப்து கூடுதல் பலன் கொடுக்கும்.
3. ஆடி மாதம் நம் வீடுகளில் உள்ள குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் கூடுதல் சிறப்பை தரும்.
4.ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.
5.அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.
6.ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
7.ஆடிப்பூரத் அன்று தான் ஆண்டாள் அவதரித்த நாள் என்பது நாம் அனைவரும் அறிந்தது.அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள்.
அந்த சமயத்தில் நாமும் ஆண்டாளை வழிபட்டால், நாம் கேட்ட அனைத்து வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
8.ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும். வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.
9.ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.
10.மேலும் ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |