ஆடி ஒன்றாம் நாள் நம் வீட்டில் வாங்கவேண்டிய முக்கியமான பொருட்கள்

By Sakthi Raj Jul 16, 2024 11:30 AM GMT
Report

 நாளை ஆடி மாத பிறப்பு.அன்றைய நாளில் எல்லாம் அம்மன் கோயில்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

அது மட்டும் அல்லாமல் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுதல் போன்ற முக்கிய நிகழ்வுகள் எல்லாம் அம்மனுக்கு நடைபெறும்.இப்பொழுது ஆடி மாதம் முதல் நாள் நாம் வீட்டில் என்ன வாங்கவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஆடி முதல் நாள் அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பொருளாக சிவப்பு நிற கண்ணாடி வலையல், சிவப்பு நிற குங்குமம் இந்த இரண்டு பொருட்களையும் புதுசாக வாங்கி வர வேண்டும்.

ஆடி ஒன்றாம் நாள் நம் வீட்டில் வாங்கவேண்டிய முக்கியமான பொருட்கள் | Aadi Matham Valaiyal Vazhipaadu Mathapirpu

பிறகு மாலை நேரம் பூஜையறையில் விளக்கு ஏற்றி இந்த இரண்டு பொருட்களையும் மகாலட்சுமி தயாரிக்கும் முன்பாக வைத்து பூஜை செய்ய வேண்டும்.

நாளைய தினம் அம்பாளுக்கு தேங்காய் பால் சேர்த்த பாயாசம் நெய் வைத்தியம் வைப்பது மிக மிக விஷேசம். பூஜை முடிந்த பிறகு வாங்கிய சிவப்பு வளையல்களை வீட்டில் இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகள் அணிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தில் கோயில்களில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

ஆடி மாதத்தில் கோயில்களில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்


குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்.

முடிந்தவர்கள் கூடுதலாக வளையல் வாங்கி வாழிபாடு செய்து தெரிந்த பெண்களுக்கு அதை பூஜை செய்து கொடுக்கலாம்.

இவ்வாறு செய்ய வீட்டில் துர்கை அம்மனின் அருள் கிடைக்கும்.வீட்டில் செல்வம் பெருகி,வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களுக்கும் அம்பாள் ஒரு நல்ல தீர்வை தருவாள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US