ஆடி மாதத்தில் கோயில்களில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள்
ஆடி மாதம் என்றாலே தெய்விகம் கமழும் மாதம்.அந்த மாதத்தில் அம்மனுக்கான வழிபாடு மிகவும் சிறப்பானது ஆகும்.நிறைய பக்தர்கள் ஆடி மாதத்தில் நிறைய நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்துவார்கள்.
அந்த வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் நாம் நினைத்ததை நிறைவேற விளக்குகள் ஏற்ற அது நிச்சயமாக நடைபெறுகிறது.
இப்பொழுது நாம் கோயில்களில் எத்தனை விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள் என்பதை பார்ப்போம்.
2 விளக்கு- குடும்பம் மேன்மைபெறும்.
3 விளக்கு- எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.
4 விளக்கு- நற்கல்வி, உடல் ஆரோக்கியம் கிட்டும்.
5 விளக்கு- விநாயகர் அருள் கிடைக்கும்.
6 விளக்கு- நோய்கள் குணமாகும்.
7 விளக்கு- திருமணத்தடை நீங்கும்.
8 விளக்கு- மாங்கல்ய பலம் கூடும்.
9 விளக்கு- நவக்கிரக பிணிகள் நொடியில் அகலும்.
10 விளக்கு- தொழில் மேன்மை பெறும். கடன் தொல்லைகள் அகலும்.
11 விளக்கு- செய்தொழிலில் லாபம் கிட்டும். போட்டியில் வெற்றி வசப்படும்.
12 விளக்கு- ஜென்மராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்.
13 விளக்கு- பில்லிசூனியபாவம் விலகும்.
14 விளக்கு- குலதெய்வபலம், சந்தான பலன் கிடைக்கும்.
15 விளக்கு- வழக்கில் வெற்றி வசப்படும்.
16 விளக்கு- வாழ்வில் 16 செல்வங்களும் கிட்டும்.
17 விளக்கு- வாகனம், வண்டி யோகம் கிடைக்கும்.
27 விளக்கு- நட்சத்திர தோஷம் நீங்கும்.
48 விளக்கு- தொழில் வளரும், பயம் நீங்கும்.
108 விளக்கு- நினைத்த காரியம் நடக்கும்.
508 விளக்கு- தீராத திருமண தோஷங்கள் அகலும்.
1008 விளக்கு- சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |