முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள் எது?

By Sakthi Raj Jul 16, 2024 08:30 AM GMT
Report

நம் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் சரியாக செய்யவேண்டும்.அப்படி செய்தால் தான் நாம் வாழ்க்கையில் எந்த தடங்கலும் இல்லாமல் அவர்கள் ஆசீர்வதோடு சிறப்பாக வாழ முடியும்.

அப்படி இருக்க ஒவ்வொரு கோயில்களில் நாம் வாழிபாடு செய்ய ஒவ்வொரு பலன் இருக்கும்.இப்பொழுது நம்முடைய முனோர்களின் ஆசியை பெற நாம் வழிபடவேண்டிய ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள் எது? | Pitru Tharpanam Munorgal Vazhipadu Worship

ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தத்தில் ஒன்றான ‘அக்னி தீர்த்தம்’ எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.

திருச்சியில் ரங்கநாதபெருமாள் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குமா?

முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குமா?


கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில், தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன்னுடைய தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது தல வரலாறு.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட, அவர்களின் வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம்.

கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அத்தல குளக்கரையில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் தீர்த்தால் சவுபாக்கிய வாழ்வு கிடைக்கும்.

முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள் எது? | Pitru Tharpanam Munorgal Vazhipadu Worship

கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் தர்ப்பணம் செய்து, கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான, தர்மங்கள் செய்தால் நன்மைகள் உண்டாகும்.

காசியின் அருகில் உள்ள விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்களைப் பெறலாம்.

காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில்தான் ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றியதாக தல புராணம் கூறுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US