முருகனை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்குமா?
வாழ்க்கையை வாழ நம்பிக்கை மிக அவசியம்.அதாவது நமக்கு மேல் ஒரு சக்தி இந்த பூமியை இயக்கி கொண்டு இருக்கிறது என்பதை நம்பினால் தான் நம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கும்.
ஒவ்வொரு வரலாறுகள் புராணங்கள் கொண்ட ஒவ்வொரு கடவுள்கள் இருக்கிறார்கள்.ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு ஆனந்த நிலை,அறிவு ஆற்றல் தந்து அருள்வார்கள்.
அதில் சிவபெருமானின் தவப்புதல்வன் கருணை கடலான கந்தன், கலியுக வரதன் ,தர்மத்தின் தலைவன் நியாயத்தை நிலைநாட்டுபவன் பக்தர்கள் துயர் தீர்ப்பவன் கலியுகத்தில் என்ன பிரச்சனை என்றாலும் முருகனை நாட அது தீர்ந்து போகும்.
அப்படியாக ஒருவர் வாழ்க்கையில் தோஷம் என்பது நிறைய சங்கடங்களை தரும்.அதிலும் செவ்வாய் தோஷம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் திருமணம் குழந்தை பாக்கியம் தள்ளிக்கொண்டே போகும்.
அப்படி செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது.
தோஷம் இருப்பவர்கள் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும் என்பது நம்பிக்கை.
மேலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கிம்.
அடுத்ததாக பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.
பிறகு மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |