பொல்லாத கண் திருஷ்டி விலக சக்தி வாய்ந்த 5 பரிகாரங்கள்
கண் திருஷ்டி என்பது நிச்சயம் பல நேரங்களில் செயல்படுவதை நாம் பார்க்க முடிகிறது. சமயங்களில் இந்த கண்திருஷ்டி நம்முடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைகிறது. என்ன தான் தீய ஆற்றல் நம்மை ஒரு சில காலகட்டம் மிகவும் துன்பத்திற்கு ஆளாக்கினாலும். அந்த துன்பமே நமக்கு இன்பம் என்கின்ற நிலையை முடிவில் கொடுத்து விடும்.
ஆக, தீய ஆற்றல் என்பது குறிப்பிட்ட சில காலங்கள் மட்டுமே ஒருவரை துன்புறுத்த முடியும். பிறகு அது அழிந்து விடும். அதுதான் உண்மை நிலவரம். இருப்பினும் அந்த கண் திருஷ்டியில் இருந்து விலகவும் அந்த தாக்கங்கள் குறையவும் நம் வீடுகளில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.

1. கல் உப்பை தண்ணீரில் கரைத்து அதில் மஞ்சள், எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பிறகு இறைவனை மனதார வழிபாடு செய்து வாரம் ஒரு முறை வீட்டின் தரையை அந்த தண்ணீர் கொண்டு தூய்மை செய்தால் வீடுகளில் இருக்கக்கூடிய கண் திருஷ்டி விலகும்.
2. வீடுகளில் இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களின் இடது காலடி மண்ணை எடுத்து ஊருக்கு வெளியே இருக்கும் வேப்ப மரத்தடியில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்துவிட வேண்டும். இது அந்த நபரின் மீது இருக்கக்கூடிய தீய ஆற்றல் மற்றும் கண் திருஷ்டி நீக்குகிறது.

3. வெள்ளை பூசணிக்காய் வாங்கி அதை இரண்டாக அரிந்து ஒன்றில் மஞ்சள் மற்றொன்றில் குங்குமத்தை தடவி வீட்டு வாசலில் வைத்து விடுங்கள். இவை கெட்ட ஆற்றல்களை எடுத்து விடும். பின்பு அந்த பூசணிக்காயை வார இறுதியில் நீர் நிலைகளில் போட்டு விடுங்கள்.
4. வீட்டின் முக்கிய வாயிலில் கண்ணாடியை மாட்டி வைக்கலாம். இது யார் கெட்ட எண்ணத்தோடு நடக்கிறார்களோ அவர்களுக்கே அதை பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டது.
5. வியாழக்கிழமை அன்று வீடுகளில் எத்தனை நபர் இருக்கிறார்களோ அத்தனை எலுமிச்சை பழம் வாங்கி பிறகு குரு ஓரையில் அந்த எலுமிச்சை பழத்தை கொண்டு வீட்டில் உள்ள நபர்களின் தலையை சுற்றி அதை ஊரில் உள்ள முச்சந்தியில் போட்டு விடுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |