இரவு முழுவதும் தொடர் வழிபாடு... வனப்பகுதியில் உள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோவில் குறித்து தெரியுமா?

By Manchu Feb 25, 2026 04:13 PM GMT
Report

நீலகிரி மாவட்டம் வனப்பகுதியில் அமைந்துள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோவில் குறித்தும் இங்கு நடக்கும் வழிபாடு குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மலையில் இருக்கும் கோவில்

நீலகிரி மாவட்டத்தில் பல வகையான வனப்பகுதியும், பலவகையான மக்களும் வாழ்ந்து வரும் நிலையில், இவர்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது.

இங்கு ஆனிக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இரவு முதல் அதிகாலை வரை இந்த கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், அருள்வாக்கு என நடைபெறுகின்றது.

இக்கோவிலில் பல்வேறு தெய்வங்களை எல்லை காவல்தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மாயார், மசினகுடி சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ஏழு அம்மன்களும் வனத்தின் எல்லைதெய்வதாக கருதப்பட்டு வழிபாடு நடத்தப்படுகின்றது.

இரவு முழுவதும் தொடர் வழிபாடு... வனப்பகுதியில் உள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோவில் குறித்து தெரியுமா? | Aanikal Mariamman Temple Festival Which Forest

கடவுள் உங்களை கடுமையாக சோதிக்கிறார் என்பதை உணர்த்தும் 3 அறிகுறிகள்

கடவுள் உங்களை கடுமையாக சோதிக்கிறார் என்பதை உணர்த்தும் 3 அறிகுறிகள்

ஆற்றங்கரை ஓரத்தில் மக்கள்

எப்பநாடு கிராம மக்கள் அனைவரும் இணைந்து, இக்கோவில் திருவிழாவை விமர்சையாக கொண்டாடுகின்றனர். அதாவது கிராம மக்கள் தெய்வத்தை ஏந்தி வனப்பகுதி வழியாக நடந்து கோவில் அருகிலுள்ள ஆற்றங்கரை ஓரத்திற்கு வருகின்றனர்.

குறிப்பிட்ட தினத்தின் போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுகின்றது. பின்பு தான் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டு மக்கள் உள்ளே செல்கின்றனர்.

இரவு முழுவதும் தொடர் வழிபாடு... வனப்பகுதியில் உள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோவில் குறித்து தெரியுமா? | Aanikal Mariamman Temple Festival Which Forest

இரவு முதல் அதிகாலை வரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றது. பழங்குடியின மக்கள் பாரம்பரிய அரகோல் இசைக்கு ஆண் மற்றும் பெண்கள் இணைந்து நடனமாடி மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்றனர்.

மக்கள் இரவு முழுவதும் கண் விழிப்பதற்கு ஏற்ப சிறப்பான ஏற்படுகள், நிகழ்ச்சிகள் என ஒழுங்கு செய்யப்படுகின்றது. அதிகாலை பூஜை முடிந்து காலை 9 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றது.

இதில் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி, பின்பு வன தெய்வத்திற்கு பலியிடும் செயல்களை ஆரம்பித்து, அதனை சமைத்து பக்தர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிக்கின்றனர். 

இரவு முழுவதும் தொடர் வழிபாடு... வனப்பகுதியில் உள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோவில் குறித்து தெரியுமா? | Aanikal Mariamman Temple Festival Which Forest

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US