பக்தி என்பது எப்படி இருக்க வேண்டும்? மன அமைதியை கொடுக்கும் அபிராமி அந்தாதி

By Sakthi Raj Jan 16, 2026 06:09 AM GMT
Report

இறைவழிபாடு என்பது எனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்பதை கடந்து இறைவனுடன் நம் மனம் ஒன்றிணைந்தபடி நம் வழிபாடு இருக்க வேண்டும். அதாவது இறைவன் மேல் பயம் கொள்வது ஒரு வித பக்தி என்றால், பக்தி செய்வது மற்றொரு நிலை, நன்றி சொல்வது இன்னொரு ஒரு நிலை.

ஆனால் உண்மையில் இறைவனை பார்க்கும் பொழுது நம் மனமானது எந்த ஒரு தேடுதலும் இல்லாமல் வேண்டுதலும் இல்லாமல் இறைவனின் திரு உருவில் அமைதி நிலையை பெற வேண்டும். மனமானது ஆனந்தத்தில் திளைக்க வேண்டும். மெய்மறந்து நிற்க வேண்டும்.

இன்பம் துன்பம் எல்லாம் கடந்து அவன் காலடியில் சரணடைய வேண்டும். இதுதான் உண்மையான பக்தி. அப்படியாக, நாம் மன அமைதி பெறவும், குழப்பங்களும் பிரச்சனைகளும் விலக எவ்வாறு பக்தி செலுத்த வேண்டும்? பக்தியானது எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு அற்புதமான அபிராமி அந்தாதி பாடல் ஒன்று இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

பக்தி என்பது எப்படி இருக்க வேண்டும்? மன அமைதியை கொடுக்கும் அபிராமி அந்தாதி | Abimari Anthathi For Life Struggles And Peace

உங்கள் ராசி இதுவா? உங்களுக்கு இந்த வயதில் தான் திருமணம் நடக்குமாம்

உங்கள் ராசி இதுவா? உங்களுக்கு இந்த வயதில் தான் திருமணம் நடக்குமாம்

பாடல்:

உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.

பக்தி என்பது எப்படி இருக்க வேண்டும்? மன அமைதியை கொடுக்கும் அபிராமி அந்தாதி | Abimari Anthathi For Life Struggles And Peace

2026 தை மாதம்: தவறவிடக்கூடாத விரதம் மற்றும் முக்கிய விஷேச நாட்கள்

2026 தை மாதம்: தவறவிடக்கூடாத விரதம் மற்றும் முக்கிய விஷேச நாட்கள்

பொருள்:

இறைவனும் இறைவனாகி இருவரும் ஒரே வடிவமாக வந்து என்னை ஆட்கொண்டு அன்பு செய்ய வைத்தார்கள். அந்த அன்பு என்பது அவர்களாலே எனக்கு கிடைத்த ஒரு வரம். அந்த அன்பு கிடைத்த பிறகு சிந்திக்க எதுவும் இல்லை. தாயாக என் மனதில் அவள் குடிகொண்டு விட்டாள். இனி எனக்கு அவளைத் தவிர வேறு ஒரு தாய் இல்லை.

மனதில் அமைதி என்கின்ற அரண்மனையை அவள் கட்டி விட்டாள். பெண் என்றாலே அவள் தானே! மற்ற பெண்கள் மேல் இருந்த ஆசை எல்லாம் மறைந்து விட்டது. ஆசை மறைந்தது என்பதை கடந்து அது புரிதல் என்கின்ற நிலையில் அமைதி பெற்று இருக்கிறது. பெண்களைப் பார்த்தால் ஒரு சலனமும் மனதில் எழவில்லை.

மனமானது தெளிந்த நீர் போலானது, என்று அம்பாளை பார்த்து பாடிய அற்புதமான பாடல் நாம் பாடினால் மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையின் மீது ஒரு அழகான பிடிப்பு உண்டாகும். முகம் தெளிவடையும் உங்களுடைய பிரச்சனைகளை சமாளிக்க கூடிய நம்பிக்கை உங்களுக்கு கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US