சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள்

By Sakthi Raj Apr 18, 2024 09:31 AM GMT
Report

 சிவ பெருமான் அவன் நினைத்தலே முக்தி கிடைக்கும் அப்படியாக ஈசனின் அருளை பெற சில அபிஷேங்கள் செய்ய நல்ல பலன்கள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேறலாம்,அதை பற்றி பார்ப்போம்

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் | Abishegam Sivan Santhanam Vibuthi Kovil

விபூதி அபிஷேகம்:விபூதியால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சந்தோஷமான வாழ்க்கையும், மோட்சமும் கிடைக்கும்.

கரும்புச்சாறு அபிஷேகம்:ஈசனை கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்ய, நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்

வலம்புரி சங்கு அபிஷேகம்: வலம்புரி சங்கில் மகாலட்சுமியும், குபேரனும் வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே, வலம்புரி சங்கு கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் | Abishegam Sivan Santhanam Vibuthi Kovil

பஞ்சாமிர்த அபிஷேகம்: பல வகையான பழங்கள், தேன், கல்கண்டு ஆகியவற்றை கலந்து பஞ்சாமிர்தம் செய்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய உடலும் உள்ளமும் வளம் பெறுவதுடன் வலிமையும் பெறலாம்

தேன் அபிஷேகம்: தேன் கொண்டு சிவனை அபிஷேகம் செய்ய, குரல் இனிமையும், இசையில் வல்லமையும் பெறலாம்.

தண்ணீரில் விழுந்த இலை: 48 நாட்களில் பாறையாகும் அதிசய கோயில்

தண்ணீரில் விழுந்த இலை: 48 நாட்களில் பாறையாகும் அதிசய கோயில்

பால் அபிஷேகம்: பால் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்ய நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

தயிர் அபிஷேகம்: தயிர் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்ய மழலைச் செல்வங்களைப் பெறலாம். 8. நெய் அபிஷேகம்: நெய் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய முக்தி பெறலாம்.

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் | Abishegam Sivan Santhanam Vibuthi Kovil

இளநீர், எலுமிச்சம் பழச்சாறு அபிஷேகம்: இவற்றைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்ய பகைவர்களின் அச்சம் நீங்கி இன்பமான வாழ்வோடு அஞ்ஞானம் நீங்கப் பெறலாம்.

சர்க்கரை அபிஷேகம்: சர்க்கரையால் ஈசனை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மன நிறைவு உண்டாகும்.

பசு நெய் அபிஷேகம்:பசு நெய் கொண்டு சிவனை அபிஷேகிக்க வாழ்வு இன்பமயமாக கவலைகள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

 கங்கை நீர் அபிஷேகம்:தூய்மையான கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய, மனக் கவலைகள் நீங்கி, பயம் நீங்கி மன நிம்மதி உண்டாகும்.

சந்தனம், பன்னீர் அபிஷேகம்:சந்தனம், பன்னீர் கலந்து சிவபெருமானை அபிஷேகிக்க இறைவன் மீதான பக்தி அதிகமாகும். நற்செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US