இன்றைய ராசி பலன்(12-04-2025)
மேஷம்:
இன்று உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். சகோதரி வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.
ரிஷபம்:
வீடுகளில் வீண் பேச்சு வார்தைகள் மற்றும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு தொலை தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். கவனமாக இருப்பது அவசியம்.
மிதுனம்:
மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். ஒரு சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். மன அமைதி காப்பது நல்லது.
கடகம்:
எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தனை மேலோங்கும். ஒரு சிலருக்கு மதியம் மேல் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். தந்தை வழி உறவால் ஆதாயம் கிடைக்கும். நன்மையான நாள்.
சிம்மம்:
வியாபாரம் நல்ல லாபம் பெற்று கொடுக்கும். இனம் புரியாத சந்தோசம் உண்டாகும். ஒரு சிலருக்கு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அமைதி காக்க வேண்டிய நாள்.
கன்னி:
குடும்பத்தில் தேவை இல்லாத விஷயங்களை ஆலோசனை செய்வதால் எதிர்ப்புகள் உண்டாகும். வேலையில் சிக்கல் உண்டாகும். கவனமாக செயல்படுவதால் வரும் ஆபத்துகளை தவிர்க்கலாம்.
துலாம்:
இன்று சரியான தூக்கம் இல்லாமல் உடல் அசதி ஏற்படும். உங்களுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். மதியம் மேல் நீங்கள் எதிர்பார்த்த செய்தி உங்களை வந்து சேரும்.
விருச்சிகம்:
பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் துணையால் உங்கள் வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும்.
தனுசு:
இன்று உங்கள் சுற்றி உள்ளவர்களில் யார் எப்படி என்ற புரிதல் உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி கவலை ஏற்படும். பெரியவர்களின் முழு ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.
மகரம்:
முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவு திருப்தி தரும். பணிபுரியும் இடத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
கும்பம்:
பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும். அமைதி காப்பது நன்மையாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை. சந்திராஷ்டமம் என்பதால் கவனம் அவசியம்.
மீனம்:
இன்று பிறரிடம் பெருமை பேசுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல் நிலையில் அக்கறை செலுத்துவீர்கள். நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இறைவழிபாடு மன தெளிவை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |