வீட்டில் மறந்தும் இந்த இடங்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்காதீர்கள்
நம்முடைய வாஸ்து சாஸ்திரத்தில் கண்ணாடி என்பது மிக முக்கியமான ஒரு விஷயம் ஆகும். கண்ணாடி என்பது அழகு பொருளும், நம்மை பிரதிபலிக்கக்கூடிய பொருள் மட்டும் அல்லாமல் நம் வீட்டில் வாஸ்து ரீதியாகவும் அதிக பங்கு வகிக்கிறது.
அதனால் நம் வீடுகளில் கண்ணாடியை தவறான திசையில் வைக்கும் பொழுது சில சிக்கல்கள் உருவாகக்கூடும். அப்படியாக, வாஸ்து ரீதியாக கண்ணாடியை குறிப்பிட்ட சில 4 திசைகளில் வைக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. கண்ணாடி வைக்க கூடாத முதல் திசையாக தெற்கு திசை இருக்கிறது. தெற்கு திசை செவ்வாய் கிரகத்தால் ஆளக்கூடிய திசை. இந்த திசை வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது. அப்படியாக, நாம் கண்ணாடியை தெற்கு திசையில் வைக்கும் பொழுது, அவை நம் வீட்டின் நேர்மறை சக்தியை தடுக்கிறது. இதனால் வீட்டில் சண்டைகள், மற்றும் பதட்டமான சூழல் ஏற்படலாம்.
2. நம் வீடுகளில் கண்ணாடியை ஒரு பொழுதும் வாசலுக்கு எதிராக வைக்க கூடாது. வீட்டு வாசல் என்பது மஹாலக்ஷ்மி குடி கொண்டு இருக்கும் இடம் ஆகும்.
அப்படியாக நாம் வீட்டு வாசலுக்கு எதிரில் கண்ணாடியை வைக்கும் பொழுது, அவை நல்ல சக்திகளை உள்ளே விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக மாறுகிறது. இதனால் வீடுகளில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் வீட்டு வாசலுக்கு எதிரே கண்ணாடி வைப்பதை தவிர்க்கலாம்.
3. அதே போல், நாம் கண்ணாடியை நம் படுக்கைக்கு நேராக வைக்க கூடாது. அவ்வாறு வைக்கும் பொழுது நமக்கு தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் உருவாகக்கூடும்.
4. வாஸ்து சாஸ்திரத்தில் வடகிழக்கு திசை ஆன்மீக மற்றும் உணர்ச்சி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த திசை தெளிவு மற்றும் ஞானத்தை குறிக்கிறது. இந்த திசையில் கண்ணாடியை வைக்கும் பொழுது, அவை நம் எண்ணங்களை கெடுக்கிறது.
இதனால் குழப்பம், பதட்டம் மற்றும் தடுமாற்றம் உண்டாகும். இந்த திசை எப்போதும் சுத்தமாகவும் திறந்த நிலையிலும் இருக்க வேண்டும் என்று பல நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆதலால் வடகிழக்கு திசையில் கண்ணாடியை வைப்பதை தவிர்ப்பது நன்மை தரும்.
மேலும், நாம் கண்ணாடியை எப்பொழுதும் சரியான உரிய திசையில் வைக்கவேண்டும். உயரமாகவோ அல்லது மிகவும் தாழ்வாகவோ வைக்க கூடாது.
அவ்வாறு வைக்கும் பொழுது அவை நல்ல சக்திகளை ஈர்க்காது. அதே போல் ஒரு பொழுதும் கண்ணாடியை இருட்டான இடத்தில் வைக்க கூடாது. அவை கெட்ட சக்திகளை ஈர்க்கக்கூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |