போதுமான செல்வத்தை வழங்க கூடிய தானம் எது தெரியுமா?
தானம் கொடுப்பது என்பது ஒரு மனிதனுக்கு மன மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்க கூடியது. ஆனால், அதை செய்ய மனிதனிடத்தில் ஒரு முக்கியமான தானம் இருக்க வேண்டும். அது தான் நிதானம். அதாவது நிதானத்தோடு செய்யும் எந்த ஒரு காரியமும் சிதறாது என்பார்கள். நிதானமாக நாம் செயல்பட்டால் மனதில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும்.
அப்படியாக தானத்தில், நிதானம் முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியமானது ஒரு தானம் இருக்கிறது. அது தான் அன்னதானம். மனிதன் "போதும்" என்று சொல்லக்கூடிய ஒரே தானம், அன்னதானம் தான்.
பொதுவாக, ஒருவரிடத்தில் பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள், பணம் கொடுத்தால் அவர்கள் மனம் இன்னும் கொஞ்சம் அதிகாமாக எதிர்பார்க்க கூடும். போதும் என்ற வார்த்தையை கேட்க முடியாது. ஆனால், ஒருவர் சாப்பிடும்போது வயிறு நிறைந்தவுடன் போதும் என்று கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும்.
இந்த "போதும்" என்ற சொல்லே, அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தை கொடுக்கும் என்கிறார்கள். எனவேதான், எல்லா தானங்களிலும் அன்னதானமே சிறந்தது என்றார்கள்.
மேலும், அன்னதானம் செய்பவர்கள், தாங்கள் சாப்பிடாமல் இருந்து மற்றவர்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் பரிமாற வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் அவர்கள் கரங்களால் பரிமாறுவதே சிறப்பு.
மேலும், பாத யாத்திரை வருபவர்களுக்கும், ஸ்தல யாத்திரை வருபவர்களுக்கும், கிரிவலம் வருபவர்களுக்கும், நடந்து வருபவர்களுக்கும், களைப்பை போக்க பல இடங்களில் பலரும் உணவளிக்கின்றனர்.
அதன்மூலம் அவர்களது ஆத்மாக்கள் திருப்தியுடன் நம்மை வாழ்த்துகிறது. அன்னதானம், வழங்கும் பொழுது நம் குடும்பத்தில் பசி என்று சொல் இல்லாத அளவு செல்வ வளம் பெருகும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |