இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(23/04/2024)

By Sakthi Raj Apr 23, 2024 03:19 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

திட்டமிட்டிருந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வரும்.உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். எதிரிகள் விலகுவர். வரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்

வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி ஆதாயம் அடைவீர்கள்.வியாபாரத்தை விருத்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும்.

மிதுனம்

எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பணத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்.வியாபாரத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும்.இழுபறியாக இருந்த முயற்சி நடந்தேறும். பூர்வீக சொத்தில் உண்டான பிரச்னை முடிவிற்க.

கடகம்

துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். முடிவு உங்களுக்கு சாதகமாகும். பாராட்டிற்கு ஆளாவீர்கள். சகோதரர்கள் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். வழக்கில் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்

வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.பணவரவு திருப்தி தரும். விரும்பியவற்றை வாங்குவீர்கள். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்கள் செயலில் லாபம் உண்டாகும்.

கன்னி

கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர்கள் உங்களைத்தேடி வருவார்கள். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். பண நெருக்கடி நீங்கும்.

துலாம்

காலையில் உங்கள் செயல்கள் இழுபறியாக இருந்தாலும் அதன்பின் நிறைவேறும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவுகள் ஏற்படும் என்றாலும் தொழிலில் ஆதாயம் கூடும். உழைப்பு அதிகரிக்கும். குழப்பங்களுக்கு இடம் தராமல் செயல்படுவதால் முயற்சிகள் லாபமாகும்.

விருச்சிகம்

வெளியூர் பயணம் வெற்றி தரும். எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். அனுஷம்: காலையில் உங்கள் விருப்பம் நிறைவேறும். அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயலில் ஆதாயம் காண்பீர்கள். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும்.

தனுசு

வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும். கடன்களை அடைப்பீர்கள்.நிதி நெருக்கடி விலகும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம்

வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். போட்டியாளர்கள் விலகுவர். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு சிலர் விமர்சனம் செய்வார்கள். அதைப் பொருட்படுத்தாதீர்.ஆரோக்கியம் சீராகும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

கும்பம்

இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள்.உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர்கள்.

மீனம்

காலையில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். யாரிடமும் இன்று வீண்விவாதங்கள் வேண்டாம். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். குடும்பத்தில் உண்டான சங்கடம் நீங்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US