Weekly rasi palan: நவம்பர் 15 முதல் 21 வரை..மேஷம் முதல் துலாம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?
2026 ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரை முக்கியமான கிரக மாற்றங்கள் நடக்கிறது. இதனால் ஒரு சில ராசிகளுக்கு புதிய வாய்ப்புகள், சிலருக்கு கூடுதல் பொறுப்புகள், முன்னேறுவதற்கான அடித்தளம் ஆகியவை கிடைக்கலாம் என்று ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கிறது.
அதிலும் குறிப்பாக செவ்வாய் குரு சேர்க்கை, சூரியனுடைய விருச்சிக ராசி பெயர்ச்சி ஆகியவை இந்த வாரத்தில் ஜோதிட முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் மேஷம் முதல் துலாம் வரை உள்ள ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து கொள்வோம்.
1. மேஷம்:
வேலை மற்றும் தொழில்:
முடிவிற்கு வராத வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படக்கூடிய காலம். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபார ரீதியாக அவசரமாக முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம்.
பணவரவு:
வருமானம் சீராக இருந்தாலும் சில செலவுகளை சந்திக்கலாம். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் கைக்கூடும்.
குடும்பம் மற்றும் காதல்:
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. காதல் உறவில் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.
ஆரோக்கியம்:
ஒரு சிலருக்கு உடல் சோர்வு தூக்கமின்மை போன்ற சில தொந்தரவுகள் வரலாம். உணவு மற்றும் ஓய்வில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

2. ரிஷபம்:
வேலை மற்றும் தொழில்:
வேலை செய்யும் இடங்களில் புதிய பொறுப்புகள் தேடி வரலாம். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் துவங்குவதற்கு முன் சரியான திட்டமிடல் அவசியம். பழைய வாடிக்கையாளர்கள் வழியாக நல்ல ஆதரவு கிடைக்கும்.
பணவரவு:
வருமானத்தை உயர்த்துவதற்கான புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் தேவை இல்லாத செலவுகள் வரலாம். ஆடம்பர செலவுகளில் கவனம் வேண்டும்.
குடும்பம் மற்றும் காதல்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் வந்து பேசுவார்கள். காதல் உறவில் மனக்கசப்புகள் வரலாம்.
ஆரோக்கியம்:
உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். உடற்பயிற்சி நடை பயிற்சி மேற்கொள்வது நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
3. மிதுனம்:
வேலை மற்றும தொழில்:
இந்த வாரம் உங்களுடைய தகவல் தொடர்பு திறன் உங்களுடைய பலமாக இருக்கப் போகிறது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தொழில் கூட்டாளிகளுடன் கவனமாக இருக்க வேண்டும்.
பணவரவு:
வருமானம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். தேவை இல்லாத விஷயங்களுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
குடும்பம் மற்றும் காதல்:
குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். காதலில் எதிர்காலம் தொடர்பான திட்டம் பற்றி பேசுவீர்கள்.
ஆரோக்கியம்:
மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஓய்வு அவசியம். நீண்ட நேரம் மொபைல் போன்றவற்ற பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

4. கடகம்:
வேலை மற்றும் தொழில்:
உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
பணவரவு:
பணவரவு உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் தேவைகளை பூர்த்தி செய்தீர்கள். பழைய முதலீடுகளை பரிசீலனை செய்வது அவசியம்.
குடும்பம் மற்றும் காதல்:
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். வாழ்க்கை துணையின் ஆதரவை பெறுவீர்கள். காதலில் இருப்பவர்கள் திருமணத்தை நோக்கி செல்ல திட்டமிடுவீர்கள்.
5. சிம்மம்:
வேலை மற்றும் தொழில்:
இந்த வாரத்தில் முக்கிய கிரக சேர்க்கைகள் உங்கள் ராசியில் நடக்க இருப்பதால் தன்னம்பிக்கையும் செயல்பாட்டில் விவேகமும் அதிகரிக்கலாம். புதிய முயற்சிகள் தொடங்குவதற்கு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
பணவரவு:
வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை தீவிர படுத்திவீர்கள். பெரிய தொகை செலவிடுவதற்கு முன்பாக அதை பற்றி ஆலோசிப்பது அவசியம்.
குடும்பம் மற்றும் காதல்:
குடும்பத்தில் உங்கள் முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். காதலில் இருப்பவர்கள் துணையின் கருத்துக்களை கேட்பது அவசியம். எதிர்காலம் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
ஆரோக்கியம்:
அதிக வேலைப்பளு காரணமாக சோர்வடைவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.
6. கன்னி:
வேலை மற்றும் தொழில்:
வேலை செய்யும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்டு செய்வதால் மட்டுமே நிலுவையில் இருக்கும் பணிகளை சரியாக செய்து முடிக்கலாம். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் ஆதரவை பெறுவீர்கள்.
பணவரவு:
நீண்ட நாள் கைகளுக்கு வராத பணத்தை வசூலிப்பீர்கள். பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் .
குடும்பம் மற்றும் காதல்:
குடும்ப உறுப்பினர்களிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாதீர்கள். காதல் விவகாரங்களை பொறுமை அவசியம்.
ஆரோக்கியம்:
உணவு பழக்கத்தில் கவனமாக இருங்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
7. துலாம்:
வேலை மற்றும் தொழில்:
நீண்ட நாட்களாக குழப்பத்தை ஏற்படுத்திய சில விஷயங்கள் விலகிச் செல்லும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.
பணவரவு:
வருமானம் மற்றும் செலவுகளுக்கு ஏற்ப பணத்தை கையாள்வது அவசியம். கடன் கொடுப்பதிலும் வாங்குவதிலும் சற்று கவனம் காட்டுங்கள்.
குடும்பம் மற்றும் காதல்:
வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட பிரச்சனைகளை பேசி முடிப்பீர்கள். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நினைத்த வரன் அமையும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு உண்டு.
ஆரோக்கியம்:
மன அமைதிக்காக பிடித்தமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். நல்ல ஓய்வும் தூக்கவும் அவசியம்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |