மேஷ ராசிக்காரர்கள் திருமணத்தில் இந்த நட்சத்திரக்காரர்களுடன் இணையதே கூடாதாம்
ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற மேஷ ராசிக்காரர்களுக்கு எந்த நட்சத்திரக்காரர்கள் பலம் மற்றும் பலவீனம் என்று தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசியில் மூன்று நட்சத்திரங்களான அஸ்வினி, பரணி மற்றும் கிருத்திகை உள்ளது.
இதில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு மிகச்சிறந்த மற்றும் பொருத்தமான நட்சத்திரமாக பரணி, ரோகிணி, பூரம், ஹஸ்தம் மற்றும் திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் இருக்கிறது.
இவர்கள் அஸ்வினி நட்சத்திரங்களுடன் இணைகின்ற பொழுது அவர்களுக்கு செல்வ வளங்களையும் வளர்ச்சியையும் கொடுக்கிறது.
இருப்பினும் மேஷ ராசிக்காரர்கள் புனர்பூசம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நபர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. அதேபோல், மேஷ ராசியில் பரணிக்கு கிருத்திகை, உத்திரம், சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரங்களும் சிறப்பானதாக இருக்கும்.

இவர்கள் இணைகின்ற போது ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். இருந்தாலும் பூசம் மற்றும் அனுஷம் நட்சத்திரங்களை தவிர்ப்பது நல்லது.
மேஷத்தில் கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு ரோகிணி, திருவாதிரை, ஹஸ்தம் ஸ்வாதி, மற்றும் சதயம் ஆகிய நட்சத்திரங்கள் மிகவும் நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.
இருப்பினும் இவர்கள் ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திரங்களை தவிர்ப்பது நல்லது. பழகும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
இந்த நட்சத்திர அடிப்படையில் திருமணம் செய்கின்ற பொழுது அவர்களுக்கு இயல்பாகவே ஒரு நல்ல புரிதலும் ஒரு இணைப்பும் ஏற்படுவதை நாம் பார்க்க முடிகிறது.
மேலும், மேஷ ராசிக்காரர்கள் பொருத்த நட்சத்திரங்களை பற்றி பல்வேறு தகவல்களை இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |