(08/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்று வரவை விட செலவு அதிகரிக்கும். செயல்களின் குழப்பம் உண்டாகலாம். வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வீர்கள். இழுபறியாக இருந்த வேலை ஒன்று இன்று முடிவுக்கு வரக்கூடும். முன்னோர் வழிபாடு வாழ்வை வளமாக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று எதிர்பாராத வரவுகளை பெறுவீர்கள். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும் வியாபாரத்தில் லாபம் காணிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத தகவல் வந்து சேரும். செயல்களில் இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த வருமானம் வரும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்று பழைய கடன் வசூலாகும். நீங்கள் ஈடுபடும் முயற்சி நிறைவேறும். .தொழிலில் நெருக்கடி விலகி நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாக அமையும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்று வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நிறைவேறும். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவியுடன் உங்கள் பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும் நாள்
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் கவனங்கள் தேவை. தேவையற்ற நெருக்கடிகள் உருவாகும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் இன்று சில தடைகள் தோன்றி மறையும் . உங்கள் முயற்சிககளில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். நேற்று வரை இருந்த சங்கடங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று தேவையற்ற குழப்பங்கள் தோன்றும். 9இதுவரை கூட்டு தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நண்பர்களால் நன்மைகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் மேற்கொள்ள முயற்சிகள் லாபமாகும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்று எதிரிகள் தொல்லை விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்பாராத வேலை ஒன்று கஷ்டத்தை உருவாக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும் வருமானம் உயரும்
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று இழுபறியாக இருந்த பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். இடத்தை விற்பதில் இருந்த தடைகள் விலகி முயற்சி வெற்றியாகும். யோசிக்காமல் செய்த செயல்களில் நன்மையும் லாபமும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். உங்கள் செயல் இழுபறி ஆனாலும் போராடி வெற்றி காண்பீர்கள். தடைகளை தாண்டி சொத்து விவகாரத்தில் முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்று வம்பு வழக்குகளில் உங்களுக்கு எதிர்மறையான பலன் உண்டாகும். அதனால் கவனம் தேவை உங்கள் எண்ணத்தை வேறு வகையில் சிதறவிட வேண்டாம் முக்கிய செயல்களில் பாதிப்புகள் உண்டாக்கும்.ஆதலால் செய்யும் செயல்களில் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசியினர்களுக்கு இன்று மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகலாம். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள் .நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானம் அவசியம் தேவை. வரவு செலவுகளில் கவனுடத்துடன் செயல் பட வேண்டிய நாள்
மீனம்
மீன ராசியினர்களுக்கு இன்று நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள் .உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். முன்னோரை வழிபட உங்கள் முயற்சி நிறைவேறும். மனதில் இருந்த நீண்ட நாள் குழப்பம் உலகி திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்