இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (10/04/2024)
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்று கவனிக்குறைவால் பணிகளில் தடுமாற்றம் ஏற்படலாம். அவசர முடிவு சங்கடத்தை உண்டாக்கக் கூடும். மனக்குழப்பும் அதிகரிக்கும் ஒவ்வொரு செயலையும் யோசித்து செயல்படுவது நன்மையை தரும் .புதிய முயற்சிகளை ஒரு முறை பலமுறை யோசித்து மேற்கொள்வது நன்மையாக அமையும்
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று வரவு ஒரு பக்கம் வந்தாலும் செலவு மறுபக்கம் வரக்கூடும். குடும்பத்தினர் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். கடன் கொடுத்தவர் நெருக்கடி தரும் வாய்ப்புகள் உள்ளது வேளை பளு அதிகரிக்கும் நாள்
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்று எடுத்த புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். தடைப்பட்டு வந்த முயற்சி நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்பார்த்த லாபத்தை உண்டாக்கும். பண வரவு அதிகரிக்கும்
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்று நெருக்கடி விலகி வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய திட்டம் ஒன்றை தீட்டி செயல்படுவீர்கள். வியாபாரத்திலிருந்த மனநிலை சரியாகி வருமானம் அதிகரிக்கும் நாள்
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் நினைத்த செயல் ஒன்று நிறைவேறக்கூடும். உங்கள் முயற்சி தடைகளுக்கு பின் நிறைவேறலாம். எதிர்பார்த்த பண வரவு வரும். குடும்பத்தில் இருந்த சங்கட நிலைகள் மாறும் .உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு என்று எதிர்பார்த்து செயல்களில் பின்னடைவு ஏற்படலாம். மறைமுக தொல்லை விலகி புதிய முயற்சிகள் வெற்றிகளை உண்டாக்கும். தொழிலில் கவனம் தேவை மற்றவரை நம்பி எந்த பொறுப்பும் ஒப்படைக்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்று நண்பர்கள் ஒத்துழைப்பால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபத்தை உண்டாக்கும். பொருளாதார நிலை உயரும். எதிர்பார்த்த தகவல்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் எதிர்பார்த்தது நிறைவேற கூடிய நாள்
விருச்சிகம்
விருச்சிக ராசியில் அவர்களுக்கு இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சரி செய்து வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்ல வாய்ப்புகள் உள்ளது. உற்சாகத்துடன் செயல்பட்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எளிதாக வெற்றிகள் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும் நாள்
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்று கடும் முயற்சிக்குப் பின் வெற்றி காண்பீர்கள் .உங்கள் செயல்களில் சில தடைகளை சந்தித்தாலும் சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் பெறுவீர்கள், விலகி சென்ற உறவு மீண்டும் தேடி வர வாய்ப்புகள் உள்ளது .நட்பால் லாப நிலை ஏற்படும்.
மகரம்
மகர ராசியில் அவர்கள் இன்று சங்கடங்களை சந்தித்தாலும் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறி பண வரவிலிருந்த தடை விலகி வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள் . உங்கள் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறக்கூடிய நாள்.
கும்பம்
கும்ப ராசியினர்களுக்கு இன்று உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறி குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும். உடல் நிலையிலும் மனநிலையிலும் உற்சாகம் உண்டாகக்கூடிய நாள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரும் .பண வரவு சங்கடத்தை நீக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும் . வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் சரி செய்வீர்கள்.எதிர்பார்ப்பு நிறைவேறக்கூடிய நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |