இன்றைய ராசிபலன் (19.05.2024)
மேஷம்
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். சிலர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்
வியாபாரத்தில் உண்டான தடைகள் விலகும். உங்கள் முயற்சிகள் இன்று எளிதாக வெற்றியாகும்.மனதில் குழப்பம் அதிகரிக்கும். பயணத்தில் சங்கடம் தோன்றும். கவனமாக செயல்படுங்கள்.
மிதுனம்
உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி உற்சாகம் அடைவீர்கள். முயற்சி வெற்றியாகும். பயணத்தில் நிதானம் அவசியம். தேவையற்ற பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும்.
கடகம்
விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும்.வியாபாரம் செய்யும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும்.
சிம்மம்
வழிபாட்டை மேற்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். உங்கள் நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும்.
கன்னி
மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் நிலை உயரும். வீண் குழப்பங்களுக்கு ஆளாவீர்கள். அத்தியாவாசிய செயல்களில் மட்டும் இன்று கவனம் செலுத்துங்கள்.
துலாம்
கோயிலுக்கு செல்வீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். உடலில் சோர்வு உண்டாகும்.
விருச்சிகம்
நன்மையான நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத லாபம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். நீங்கள் எதிர்ப்பார்த்த பணம் வருவதில் தாமதமாகும்.
தனுசு
விழிப்புடன் செயல்படவும். தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து அதை மாற்றம் செய்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை ஆதாயமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.
மகரம்
இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.உங்கள் முயற்சியில் எதிர்ப்பாராத தடைகளை சந்திப்பீர்கள். செயல்களில் நெருக்கடி உண்டாகும்.
கும்பம்
சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும்.சந்திராஷ்டமம் என்பதால் அமைதியாக இருங்கள். பிறரது பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.
மீனம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயலை முடிப்பீர்கள்.உங்கள் எதிர்ப்பார்ப்பு இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். அமைதி காக்க வேண்டிய நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |