உள்ளங்கை அரித்தால் பணம் வருமா? முழு விவரங்கள் இதோ
நம்முடைய இந்து மதத்தில் ஆன்மீக ரீதியாக நிறைய சகுனங்கள் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒருவருக்கு திடீரென்று உள்ளங்கை அரிக்கும் பொழுது, அதனுடன் சில ஆன்மீக தொடர்புகளை கொண்டு சில முக்கியமான விஷயங்கள் சொல்லப்படுகிறது.
இதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்கள் என்ன? உள்ளங்கை உள்ளங்கால் திடீரென்று அரித்தால் நமக்கு பணம் வருமா? அல்லது பண இழப்புகள் ஏற்படுமா? என்பதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
1.திடீர் என்று சிலருக்கு வலது பாதம் அல்லது வலது உள்ளங்காலில் அரிப்பு ஏற்படுவதை நாம் பார்க்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுவது சாஸ்திர ரீதியாக ஒரு நல்ல சகுனமாக அறிகுறியாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் போது நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் உங்களுக்கு கைகூடி வரும் என்ற முன் அறிவிப்பை அது கொடுப்பதாக சொல்கிறார்கள்.

2. இதுவே இடது பாதம் அல்லது இடது உள்ளங்காலில் அரிப்பு ஏற்பட்டால் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இவை நமக்கு பயனங்களில் தடை அல்லது பொன் பொருள் இழப்புகளை சந்திக்க கூடும் என்று சொல்கிறார்கள்.
3. மேலும் ஒருவருக்கு இடது உள்ளங்கையில் அரிப்பு உண்டாகும் பொழுது அவர்களுக்கு பொருளாதார இழப்புகளை சந்திக்க கூடும் என்று சொல்கிறார்கள். இவை சில நேரங்களில் ஆரோக்கிய குறைபாடுகளை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
4. அதுவே வலது உள்ளங்கையில் அரிப்பு உண்டாக அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தையும் திடீர் பண வரவையும் அவை குறிக்கிறது.
மேலும் இவ்வாறு கை கால்களில் அரிப்பு உண்டாக நாம் எப்பொழுதும் ஆன்மீக ரீதியான ஒரு சகுனங்களோடு தொடர்பு கொண்டு பார்க்க முடியாது. இவை சில நேரங்களில் நம்முடைய ஆரோக்கியத்துடன் தொடர்புள்ள விஷயமாகவும் இருக்கலாம். ஆதலால் கவனமாக இருப்பது அவசியம் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |