2025 ஆகஸ்ட் மாதம் சிறப்பாக அமைய 12 ராசிகளும் செய்யவேண்டிய பரிகாரங்கள்
நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அப்படியாக, 2025 ஆம் ஆண்டு பிறந்து 7 மாதம் முடிந்து 8 வது மாதம் பிறந்து விட்டது.
இந்நிலையில் பலருக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்கள் மட்டும் முடிவிற்கு வந்ததுப் போல் இல்லை. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 12 ராசிகளும் தங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையவும் எதிர்மறை ஆற்றல் விலகவும் செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றிப் பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் இந்த மாதத்தில் எதிர்மறை சக்திகள் விலக 7 காய்ந்த மிளகாய் எடுத்துக்கொண்டு, அதைக் கொண்டு ஏழு முறை தலையை சுற்றி நெருப்பில் போட வேண்டும்.
ரிஷபம்:
இவர்கள் இந்த மாதத்தில் பொருளாதாரம் சிறக்கவும் மன கஷ்டங்கள் விலகும், பெருமாள் மற்றும் மஹாலக்ஷ்மி தாயாரை வணங்கி விளக்கு ஏற்றி மனதார வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
மிதுனம்:
இவர்கள் ஆசைகள் நிறைவேற பைகளில் சிறிது ஏலக்காய் வைத்துக்கொண்டும், தினமும் ஒரு ஏலக்காய் சாப்பிட்டு வந்தால் விரைவில் நினைத்தது நிறைவேறும்.
கடகம்:
இவர்கள் வாழ்க்கையில் உள்ள இக்கட்டான சூழ்நிலை விலக சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கி கொடுத்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
சிம்மம்:
இவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் விலக துர்காதேவியை மனதார வழிபாடு செய்து வரலாம்.
கன்னி:
கன்னி ராசியினர் சந்திக்கும் மோசமான நிலை மாற வீடுகளில் துளசி செடி வளர்க்கலாம். அதேப்போல், இவர்கள் கோயில்களுக்கு துளசி செடியை தானம் கொடுத்து வந்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினர் மன போராட்டம் விலக தினமும் பகவத் கீதை வாசிப்பது நன்மை அளிக்கும். அதேப்போல் இவர்கள் ஏழை பெண் குழந்தைகளுக்கு ஆடைகள் தானம் செய்தாலும் வாழ்க்கையில் மாற்றம் கிடைக்கும்.
விருச்சிகம்:
இவர்கள் கிருஷ்ணரை வழிபாடு செய்ய தொடங்க வேண்டும். அதோடு, இவர்கள் கிருஷ்ணர் கோயில்களுக்கு புல்லாங்குழல் வாங்கி கொடுத்து வழிபாடு செய்தால் கர்ம வினைகள் யாவும் குறையும்.
தனுசு:
இவர்கள் வாழ்க்கையை சூழ்ந்து உள்ள இருள் விலக தினம் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். அதோடு, இவர்கள் வாழைமரத்திற்கு அடியில் தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நல்ல பலன் கொடுக்கும்.
மகரம்:
இவர்கள் மன வலிமையோடு இருக்க தினமும் ஹனுமன் சாலிசா படித்து வர வேண்டும்.
கும்பம்:
இவர்கள் தினமும் விஷ்ணு பகவானின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கையில் சந்திக்கும் துன்பம் விலகும்.
மீனம்:
இவர்கள் மீன்களுக்கு உணவு அளித்து வந்தால் நல்ல திருப்பம் உண்டாகும். அதோடு கிருஷ்ணர் வழிபாடு செய்து வரும் பொழுது கிரகங்களால் உண்டாகும் பாதிப்புகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







