பாபா வாங்கா: இந்த ஆண்டு முடியும் முன் இந்த ராசிகளுக்கு இதே நடந்தே தீருமாம்
இந்த 2025 ஆம் ஆண்டு இன்னும் 60 நாட்களில் முடிய உள்ளது. அப்படியாக பாபா வாங்கா என்பவர் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து வைத்து சென்ற ஒரு மகான் ஆவார். இவர் கணித்த பெரும்பாலான விஷயங்கள் நடைமுறை வாழ்க்கையில் நடந்ததை நாம் கவனிக்க முடிகிறது.
அப்படியாக இந்த ஆண்டு முடியும் முன் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டம் பெற்று அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் என்று பாபா வாங்கா கணித்திருக்கிறார். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினர் இந்த ஆண்டு முடியும் முன் நிறைய மகிழ்ச்சியை சந்திக்கப் போகிறார்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகிறது. இவர்களால் இவர்களுடைய பெற்றோர்கள் நல்ல மகிழ்ச்சியை அடைவார்கள். சமுதாயத்தில் நல்ல பெயரும் மதிப்பும் பெறப் போகிறார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த ஆண்டு முடியும் முன் சில எதிர்பாராத முக்கியமான சம்பவங்களை இவர்கள் செய்ய காத்திருக்கிறார்கள். அதாவது இவர்கள் குடும்பத்துடன் தொலைதூர பயணம் சென்று நிறைய நினைவுகளை சேர்க்கப் போகிறார்கள். மேலும் தொழில் ரீதியாக இவர்களுக்கு வருமானம் உயர்வு கிடைப்பதோடு பாராட்டுக்களும் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த ஆண்டு முடியும் முன் அவர்களுக்கு திருமணம் ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண உறவில் அவர்களுக்கு சிக்கல்கள் இருந்தால் அவை அனைத்தும் விலகி கணவன் மனைவியுடன் இருவருமாக மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவார்கள். திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பண வரவு இவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |