ஏப்ரல் இறுதி வாரத்திற்குள் இந்த ராசிகளுக்கு இது நடந்தே தீருமாம்
ஏப்ரல் மாதம் முடியும் காலம் நெருங்கி விட்டது. இந்த காலகட்டத்தில் சில நட்சத்திரங்களுக்கு ஒரு சில மாற்றம் உண்டாகும். இதனால் சில ராசிகளுக்கு தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும். அப்படியாக, ஏப்ரல் இறுதி வாரத்திற்குள் எந்த ராசியினர் மிக பெரிய மாற்றமும் அதிர்ஷ்டமும் சந்திக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்கு ஏப்ரல் மாதம் இறுதி வாரத்திற்குள் நீண்ட வருடமாக எதிர்பார்த்த காரியம் ஒன்று நடக்கும். புதிய அலுவலகம் மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல மாற்றம் நடக்கும். மனதில் நேர்மறை ஆற்றல் பெருகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உருவாகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு திடீர் மாற்றங்கள் நடக்கும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய தேடுதல் உங்கள் வாழ்க்கைக்கு நல்ல மன மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டில் உங்கள் மதிப்பு உயரும். காதல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு நற்செய்தி வந்து சேரும்.
கன்னி:
கன்னி ராசிக்கு ஏப்ரல் மாதம் இறுதி வாரத்திற்குள் வீட்டில் புதிய மாற்றம் நிகழும். நெருங்கிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
தனுசு:
தனுசு ராசிக்கு ஏப்ரல் மாதம் வாரத்திற்குள் மனதில் நேர்மறை சிந்தனை பெருகும். சிலருக்கு வீடுகளில் உண்டான சண்டைகள் முற்றிலுமாக விலகும். எதையும் தீர ஆலோசித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். புதிய நகை வாங்கும் யோகம் பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |