தீய சக்திகளை அடியோடு விரட்டும் அரகஜா.. எப்படி பயன்படுத்துவது

By Sakthi Raj Jun 30, 2026 09:54 AM GMT
Report

சமீப காலமாக மக்களிடையே அரகஜா ஒரு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரகஜா கஸ்தூரி, ஜவ்வாது, புனுகு, அத்தர், பன்னீர் மற்றும் சாதிக்காய் போன்ற நறுமணமுடைய மூலிகைகளை கொண்டு மை போன்று தயாரிக்க கூடிய ஒரு தெய்வீக பொருளாகும்.

இதனை ஆன்மீக வழிபாடுகளில் தெய்வ வசியத்திற்கும் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய முக்கியமான பொருளாகும். இந்த அரகஜாவை நெற்றியில் பொட்டாக வைத்துக் கொள்கின்ற பொழுது நமக்கு மன அமைதி கிடைக்கிறது.

நேர்மறையான எண்ணம் வருகிறது. நம்மை சுற்றி இருக்கின்ற துர் சக்திகள், கண் திருஷ்டிகள் அடியோடு விரட்ட கூடிய வல்லமை பெறுகிறது. மேலும், குலதெய்வ வழிபாட்டின் போது மஞ்சள் மற்றும் அரகஜாவை ஒன்றாக குழைத்து நெற்றியில் வைத்துக் கொள்வது நமக்கு மிகச் சிறப்பான பலன்களை பெற்றுக்கொடுக்கும்.

தீய சக்திகளை அடியோடு விரட்டும் அரகஜா.. எப்படி பயன்படுத்துவது | Benefits And How To Use Arakaja

12 ராசிகளுக்குமான அதிர்ஷ்ட தெய்வம் யார்? வழிபாடு செய்ய தவறாதீர்கள்..

12 ராசிகளுக்குமான அதிர்ஷ்ட தெய்வம் யார்? வழிபாடு செய்ய தவறாதீர்கள்..

அவை நமக்கு குலதெய்வத்தின் முழு ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொடுக்கும். அதே போல் சிவபெருமான் மற்றும் கால பைரவர் போன்ற தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகளில் இது அபிஷேக பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவருக்கு தொழில் வளர்ச்சி பெறுவதற்கும் நல்ல லாபம் வருவதற்கும் அரகஜாவை கடை அலுவலகம் மற்றும் கல்லாப்பெட்டியில் வைப்பது நன்மை கொடுக்கும். அதேபோல், இதனை தினமும் சிறிதளவு எடுத்து நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ளலாம்.

வீடுகளில் குலதெய்வத்தை அழைக்கவும், செம்பு அல்லது பித்தளை செம்பில் நீர் நிரப்பிஅதில் அரகஜாவை மஞ்சள்ருடன் குழைத்து பொட்டு வைத்தால் குலதெய்வம் வீட்டிற்கு வந்து ஆசீர்வதிக்கும் என்பது ஐதீகம்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US