எதிர்பாராத துன்பம் வரும் பொழுது நாம் செய்யவேண்டியவை
மனிதனாக பிறந்த அனைவர்க்கும் கஷ்டம் என்பது இருக்கும்.அப்படியாக துன்பத்தில் மிக கொடுமையான துன்பம் வறுமை.இந்த வறுமை ஒரு மனிதனை நிலைகுலைய வைத்து விடும்.வறுமை வந்துவிட்டால் செய்வதறியாது ஒவ்வொரு நாளையும் கடப்பது கடினமாகி விடும்.
பிறரிடம் கடன் வாங்கும் சூழ்நிலையை கொண்டு வந்து விடும் இந்த வறுமை.இந்த வறுமையை காட்டிலும் மிக கொடுமையானது உடல் உபாதைகள்.சிலருக்கு சரி செய்ய முடியாத நோய் ஏற்பட்டு விட்டால் அவை வறுமையை விட கொடியது.இவ்வாறு கஷ்டம் மேல் கஷ்டம் ஏற்பட நாம் செய்யவேண்டியது வழிபாடு தான்.
நாம் அனைவரும் நந்தீஸ்வரர் கேள்வி பட்டு இருப்போம்.சிவபெருமானின் கனபூதங்களில் ஒருவராக திகழக்கூடியவர் தான் நந்தீஸ்வரர். நந்தீஸ்வரரின் அனுமதி இல்லாமல் சிவபெருமானை நம்மால் வழிபாடு செய்ய முடியாது அதையும் மீறி வழிபாடு செய்தாலும் அந்த வழிபாட்டிற்குரிய பலன் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
அனைத்து சிவாலயங்களில் முதலில் நாம் நந்திஸ்வரரை வழிபாடு செய்த பிறகே சிவபெருமானை வணங்க செல்ல வேண்டும்.அவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது தான் நமக்கு உரிய பலன் கிடைக்கும்.மேலும் சிவபெருமானின் மிகவும் விஷேசமான பிரதோஷங்களில் சிவபெருமானுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை நந்திக்கும் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அபிஷேகங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு நந்தீஸ்வரரின் மேல் சிவபெருமானும் பார்வதி தேவியும் அமர்ந்து அந்த கோவிலை சுற்றி வருவார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நந்திஸ்வரரை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும் பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகிறது.
அதிலும் குறிப்பாக வறுமை, பொருளாதாரப் பிரச்சினை, நோய் போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று கூறப்படுகிறது. முடிந்தால் நாம் இந்த வழிபாட்டை சிவாலயத்திற்கு சென்று செய்யலாம்.இல்லை வீட்டில் இருந்தே நாம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
வீட்டிலேயே வழிபாடு செய்பவர்கள் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் சிவபெருமான் படம் முன் அமர்ந்து நந்தீஸ்வரர் மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்ய அவர்களுடைய பிரச்சன்னை விரைவிலே தீரும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி பிறகு நந்தீஸ்வரரின் காயத்ரி மந்திரத்தை தங்களால் இயன்றது குறைந்தபட்சம் 11 ல் இருந்து அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கூறலாம்.
குறிப்பாக பிரதோஷம் வரும் நாளில் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் வாங்கி கொடுத்த அருகம்புல்லை சாற்றி இந்த மந்திரத்தை கூறும் பொழுது அதற்குரிய பலன் பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி
ப்ரசோதயாத். நம்முடைய வாழ்க்கையில் உண்மை கடவுள் மட்டுமே.எல்லாம் மாயை ஆக துன்பம் அளவுக்கு அதிகமான பிரச்னை என்று மனம் வருந்தி கொள்ளாமல் துன்பம் ஏற்படும் காலத்தில் நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம் சொல்ல நிச்சயம் நல்லதோர் மாற்றம் நிகழும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |