வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் நடக்கும் நன்மைகள்

By Sakthi Raj Sep 27, 2024 05:30 AM GMT
Report

வாரத்தில் வெள்ளிக்கிழமை என்பது மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.அன்றைய தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறும்.இன்னும் சிலர் வெள்ளிக்கிழமையில் அம்பாளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வெள்ளிக்கிழமையில் இன்னும் விஷேசமாக சில பூஜைகள் செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்கின்றது.அதை பற்றி தெரிந்து கொள்ளவோம்.

எந்த காரியத்தை வெள்ளிக்கிழமையில் செய்தாலும் கண்டிப்பாக வெற்றியே கிடைக்கும்.இவ்வளவு சிறப்புகள் கொண்ட வெள்ளிக்கிழமையில் செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் வீட்டில் இருந்த இருள் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் நடக்கும் நன்மைகள் | Benefits Of Friday Fasting Worship 

மேலும் வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கலாம்.இவ்வாறு செய்வதால் கடன் சுமை தீரும்.அடுத்தபடியாக தாயாருக்கு பச்சை வளையலை அணிவித்திட வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி மங்களம் உண்டாகும்.

ஒருவர் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்வதால் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

கேட்ட வரத்தை உடனே அருளும் குலசை முத்தாரம்மன்

கேட்ட வரத்தை உடனே அருளும் குலசை முத்தாரம்மன்


நாம் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிப்பது சிறந்த பலன்களை தருகிறது.இவ்வாறு செய்வதால் நம்முடைய தோஷம் விலகும்.

வீடுகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர் சக்திகள் இருந்தால் விலகிவிடும். அதோடு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெய்விக ஆற்றல் அதிகரித்து மனதில் புத்துணர்வு உண்டாகும்.

வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் நடக்கும் நன்மைகள் | Benefits Of Friday Fasting Worship

வாழ்க்கையில் தொழில் தடங்கல் போன்ற துன்பத்தை சந்திப்பவர்கள் வெள்ளிக்கிழமை அரசமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு அன்று 11 தீபம் ஏற்றி வழிபட்டு அவை விலகி வாழ்க்கையில் சுபம் உண்டாகும். இதேபோல் அரசமரத்தை 11 முறை சுற்றி வருவதும் மிகச் சிறந்த நற்பலன்களை தரும்.

பண வரவு அதிகரிக்க வெள்ளிக்கிழமைத்தோறும் குபேர விளக்கில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதற்கு மிகவும் உகந்த நாள்.தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

மேலும்,வீடுகளில் வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியின் அம்சமாக விளங்கும் உப்பை நாம் வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.ஆக வீடுகளில் உப்பு வாங்கி நிரப்பி வைப்பது வீட்டிற்கு நற்பலன்களை அருளிச்செய்யும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US