சூரியனை வழிபடுவதால் வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்கள்
சூரிய பகவான் மிகவும் மங்களகரமானவர். கிரகங்களில் சூரியன் மிகவும் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார். அப்படியாக, காலம் காலமாக நாம் சூரிய நமஸ்காரம் செய்வது உண்டு. அதாவது அதிகாலையில் எழுந்து சூரியனை வழிபட நமக்கு அதீத நன்மைகள் கிடைக்கிறது.
காரணம், நவகிரகங்களில் முதலானவர் சூரியன். அப்படிப்பட்ட சூரியனை அனைவரும் காலையில் வணங்குவதால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். இந்த உலகேமே, நிலையற்றது. அதாவது மனிதன் எவ்வளவு அழகாக இருந்தாலும் அதுவும் சிறிது காலமே, எத்தனை ஆரோக்கியம் கொண்ட உடலாக இருந்தாலும் அதுவும் சிறிது காலமே.
அப்படியாக இந்த நிலையற்ற வாழ்க்கையில் சூரியனால் மனிதனுக்கு மிக பெரிய நன்மைகள் கிடைக்கிறது. சூரியன் மகத்தான சக்திகொண்டவர். அதே போல் சந்திரனும் இன்னொரு மிக பெரிய சக்தி.
அதாவது, நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. மேலும் இந்த சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதற்கு சமம். அந்த வகையில் கடவுளின் குணமாக, உருவமாக, வடிவமாக சூரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.
கடவுளை நாம் பார்க்க முடியாது உணர மட்டுமே முடியும். அவரை பார்த்து உணர்ந்து கொள்ளும் வகையில் தான் நாம் சூரியனை வழிபடுகின்றோம். ஆக இவ்வளவு சக்தி வாய்ந்த சூரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும்.
நம்முடைய ஞாபக சக்தி அதிகரிக்கும். அதனால், காலையில் கட்டாயம் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சூரியனை பார்த்து தியானம் செய்வது நம்முடைய வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தை கொடுப்பதோடு, வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |