குரு நட்சத்திர மாற்றம்- எதிர்பாராத யோகம் யாருக்கு?
9 கிரகங்களில் மிகவும் மங்களகரமாக விளங்கக்கூடியவர் குரு. குரு பகவான் செல்வம் செழிப்பு போன்றவற்றிக்கு காரணியாக இருக்கிறார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை அவருடைய இடத்தை மாற்றுகிறார்.
குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் குரு பகவான் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதியில் அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறினார்.
இந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் அவர் தனது அடுத்த ராசியை மாற்ற உள்ளார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் எல்லா ராசிகளுக்கும் ஒருவித தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி அன்று ரோஹிணி நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைகிறார்.
இந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஓரு சில ராசிகளுக்கு மிக பெரிய மாற்றத்தை கொடுக்கிறார். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
சிம்மம்:
குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு மகிழ்ச்சையை கொடுக்க போகிறார். இந்த நேரத்தில் மனதில் நேர்மறை சிந்தனை பெருகும். நீண்ட காலமாக புதிய தொழில் தொடங்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நால் காலம் இது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும்.
கடகம்:
குரு பகவானின் நட்சத்திர இட மாற்றத்தால் உங்களுக்கு மிக பெரிய யோகம் கிடைக்க போகிறது. உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல் படிப்படியாக குறையும். நண்பர்கள் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மிகவும் துணையாக இருப்பார்கள். பண வரவு நன்றாக இருக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் சொந்த வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். நிதி ரீதியாக ஏற்பட்ட சிக்கல் எல்லாம் காணாமல் போகும். செய்யும் காரியம் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |