இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளதாம்

By Sakthi Raj Feb 04, 2026 10:00 AM GMT
Report

ஒரு சிலர் பெற்றோர்கள் பார்த்து வைக்கக்கூடிய துணையை தான் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு பிடிவாதமாக இருப்பார்கள். ஆனால் கால சூழ்நிலை அவர்களை காதல் திருமணத்திற்கு தள்ளிவிடும்.

இதற்கு அவர்களுடைய ராசி அமைப்பு தான் ஒரு காரணமாக இருக்கிறது. ஆதலால் திருமணம் என்பது நம் கைகளில் இல்லை. அவை இறைவனால் கொடுக்கக்கூடிய ஒரு வரமாக இருக்கிறது. அந்த வகையில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் செய்யக்கூடிய அமைப்பு உள்ளது என்று பார்ப்போம்.

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளதாம் | Zodiac Who Meant For Love Marriage

அதிகாலை 2 மணிக்கே நடைதிறக்கும் அதிசய கிருஷ்ணன் கோயில்

அதிகாலை 2 மணிக்கே நடைதிறக்கும் அதிசய கிருஷ்ணன் கோயில்

துலாம்:

துலாம் ராசியை பொறுத்தவரை இவர்கள் தைரியமாக ஒரு முடிவை எடுக்க கூடியவர்கள். எதையும் நடுநிலையாக யோசிப்பதால் பல நேரங்களில் இவர்கள் தனக்கு பிடித்த விஷயத்தை செய்வதை தவறுவதில்லை.

அப்படியாக இவர்களுக்கு ஒரு நபரை சந்தித்து அவர்களிடம் பேசி பழகி நன்றாக ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு தான் திருமண வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் இவர்களுக்கு கடைசி நொடியில் கூட அவர்களுடைய திருமணம் காதல் திருமணமாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

மிதுனம்:

மிகவும் பிடிவாத குணம் கொண்ட மிதுன ராசியினர் அவ்வளவு சீக்கிரம் எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தங்களுக்கு ஒரு விஷயம் பிடித்தால் மட்டுமே அதில் மகிழ்ச்சியாக பயணிக்க கூடியவர்கள்.

அந்த வகையில் வாழ்க்கை துணை என்று வரும்பொழுது எந்த நிலையிலும் அவர்களை அவர்கள் விட்டுக் கொடுக்காத அமைப்பை பெற்று இருக்கிறார்கள். ஆதலால் இவர்கள் பெரும்பாலும் காதல் திருமணம் செய்வதை தான் விரும்புகிறார்கள். காதல் திருமணம் தான் இவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாக அமைகிறது.

கண் திருஷ்டி, ராகு- கேது தோஷம் போக்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்

கண் திருஷ்டி, ராகு- கேது தோஷம் போக்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்

தனுசு:

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இவர்களிடம் ஒரு புரட்சிகரமான சிந்தனை இருப்பதை நாம் பார்க்க முடியும். தனுசு ராசியினர் சக மனிதர்களைப் போல் சிந்திக்கவும் செயல்படவும் மாட்டார்கள். இவர்களுடைய சிந்தனை செயல்பாடுகள் எல்லாம் வேறுபட்டதாகவும் புரட்சிகரமானதாகவும் எப்பொழுதும் இருக்கும்.

அதனால் இவர்கள் ஒரு சிறிய கட்டமைப்புக்குள் இவர்களை வைத்துக் கொள்ள விரும்பாத காரணத்தினால் வாழ்க்கை துணை என்று வரும் பொழுது தனக்கு மிகவும் பிடித்த ஒரு நபரை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் காதல் திருமணத்தை இவர்கள் விரும்புவார்கள். காதல் திருமணம் இவர்களுக்கு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US