உங்கள் கனவில் இந்த தெய்வங்கள் வந்தால் நிச்சயம் இது நடக்குமாம்
கனவு என்பது பொதுவாக அன்றைய நாளில் நாம் எந்த விஷயத்தை பற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோமோ அதுவே கனவாக வருவதை நாம் காண முடியும். ஆனால், சில சமயங்களில் நமக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாத ஒரு புதிய கனவுகள் வரும். அவ்வாறான கனவுகள் நமக்கு எதிர்காலத்தைப் பற்றி பிரதிபலிக்கக் கூடியதாகவும் அமைகிறது.
மேலும், கனவுகளில் மனிதர்களில் தொடங்கி விலங்குகள், மரம், செடி கொடிகள், மலை, காடு, கடல் போன்று பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய எல்லா விஷயங்களும் நமக்கு கனவாக வருவதை பார்க்க முடியும். சமயங்களில் முன் பின் அறிமுகம் இல்லாதா முகம் கூட நம் கனவில் தோன்றுவது உண்டு.
மனிதர்கள் போல் சமயங்களில் தெய்வங்களும் நம் கனவில் வருவதை காணலாம். அப்படியாக, தெய்வங்கள் நம்முடைய கனவில் வருவதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

1. கனவில் சிவலிங்கம் தோன்றினால் நீங்கள் தியானத்தில் ஈடுபட வேண்டும் என்பதின் அறிகுறியாகும்.
2. கனவில் முருகப்பெருமான் வந்தால் நீங்கள் நினைத்த காரியம் உடனே கை கூடி வரப்போகிறது.
3. விநாயகர் கனவில் வந்தால் தொடங்கக் கூடிய காரியம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நன்மையில் முடியும்.
4. பெருமாள் கனவில் வந்தால் புதிதாக தொடங்கக்கூடிய தொழில் மற்றும் வரக்கூடிய வாய்ப்புகள் சிறப்பாக அமையும்.
5. விஷ்ணு பகவான் கனவில் வந்தால் மிகப்பெரிய செல்வந்தராக கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
6. அம்பாள் கனவில் வந்தால் நம்முடைய குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
7. குலதெய்வம் கனவில் வரும் பொழுது நாம் வேண்டிய காரியம் நினைத்தது போல் குலதெய்வத்தின் அருளால் நடைபெறும்.
8. கோவில் கோபுரம் கனவில் வருகின்ற பொழுது உங்களுடைய முன் ஜென்ம கர்மாவானது படிப்படியாக குறைகிறது என்பதின் அர்த்தமாகும்.
9. கனவில் இறைவனுடன் நீங்கள் பேசுவது போல் வந்தால் பாவங்களில் இருந்து விடுதலை பெற போகிறீர்கள் என்பது அர்த்தமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |