மறந்தும் இந்த நாட்களில் ஜாதகம் பார்க்க செல்லாதீர்கள்?
ஜோதிடம் என்பது நம்முடைய எதிர்காலத்தை கணித்து நம்மை வழிநடத்தும் ஒரு முக்கியமான அங்கமாகும்.அப்படியாக,இந்த ஜோதிடம் பார்ப்பதற்கு என்று சில முக்கியமான நாட்கள் இருக்கிறது.எல்லா நாட்களிலும் நாம் ஜோதிடம் பார்க்க செல்ல முடியாது அதே போல் ஜோதிடர்களும் சில நாட்களில் ஜாதகம் பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள்.
காரணம்,ஜோதிடர் வாக்கு சொல்லும் நேரமும் காலமும் மிக முக்கியம்.ஆதலால்,நமக்கு வசதியான நாட்களை தேர்ந்தெடுத்து ஜாதகம் பார்த்து கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பதை தவிர்த்து ஜாதகம் பார்க்க சரியான நாளில் செல்ல நல்ல பதில் கிடைக்கும்.
ஜோதிடம் பார்க்க கூடாத நாட்கள் :
ஒரு முக்கிய காரியமாக ஜாதகம் பார்க்க செல்லும் முன் அந்த ஜாதகத்தை இறைவன் முன் வைத்து மனதார வழிபாடு செய்து நல்ல நேரம்,சகுனம் பார்த்து செல்ல வேண்டும்.எமகண்டம், ராகு காலம் போன்ற காலங்களில் ஜாதகம் பார்க்க வீட்டில் இருந்து புறப்படக் கூடாது.
கரிநாள், சூரிய அஸ்தமன காலம், அஷ்டமி, நவமி, பிரதமை, கிருத்திகை, பரணி, ஆயில்யம், கேட்டை, பூரம் ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களிலும் ஜாதகம் பார்க்கக் கூடாது.இந்த நேரத்தில் ஜோதிடம் பார்த்தால் அவர்கள் சொன்ன பலனும் பலிப்பதில்லை.
ஜோதிடம் பார்க்க உகந்த நாள்:
நாம் சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமைகளில் ஜாதகம் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.ஜோதிட சாஸ்திரப்படி, பல நல்ல காரியங்களை ஞாயிற்றுக்கிழமை செய்யவே கூடாது என சொல்லப்படுகிறது. அதே போல் செவ்வாய் கிழமையிலும் ஜாதகம் பார்க்க செல்லக் கூடாது.
ஆதலால்,புதன்கிழமை, வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும் நல்ல நேரம், யோகம் பார்த்து, கரிநாள் போன்றவை இல்லாமல் பார்த்து ஜாதகம் பார்க்க செல்ல வேண்டும். அமாவாசை நட்களிலும் ஜாதகம் பார்க்க செல்லவதை தவிர்க்க வேண்டும்.
ஆக,இந்த மாதிரியான கிழமைகளில் ஜாதகம் பார்க்க சென்றால் நாம் எதை எதிர்பார்த்து ஜாதகம் பார்க்க செல்கின்றமோ அதற்கான நல்ல தெளிவான பதிலை நாம் பெறமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |