கண் திருஷ்டி, ராகு- கேது தோஷம் போக்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்
இந்துமத சாஸ்திரத்தில் உப்பு மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது. மேலும் மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய 108 பொருட்களில் உப்பு முதன்மை வகிக்கிறது. ஆதலால் எந்த ஒரு சுபகாரியங்கள் அல்லது திருஷ்டி கழிக்க வேண்டும் என்றாலும் அங்கு உப்பு இல்லாமல் அவை நடைபெறுவதில்லை.
அப்படியாக, உப்பு எவ்வாறு சமையலுக்கு பயன்படுகிறதோ, அதேபோல் ஒரு மனிதன் வாழ்க்கையில் அவனுக்கு அதிர்ஷ்டத்தை வரவும், தீய கண்களில் இருந்து விடுபடவும் உப்பு அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. அந்த வகையில், நாம் தினமும் குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளித்து வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
1. நாம் குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளிக்கும் பொழுது அவை நம்முடைய மன அழுத்தத்தையும், மன பதட்டத்தையும் அவை குறைக்கிறது. காரணம் தண்ணீரில் உப்பும் சேரும் பொழுது சந்திரனும் சுக்கிரனும் சமனும் நிலை அடைகிறார்கள். அதனால் இவை நம் நரம்புகளை அமைதிப்படுத்துவதோடு நம்முடைய கோபத்தை குறைத்து ஒரு நல்ல அமைதியான மனநிலையை கொடுக்கிறது.
2. குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளிக்கும் பொழுது நமக்கு நல்ல அதிர்ஷ்டம் தேடி வரும். அதே போல் செய்யும் காரியங்களில் வெற்றியும் தடைகளும் விலகும். இழந்த பொருட்கள் மீண்டும் நம்மை தேடி வரும்.
3. ஒருவருக்கு திருஷ்டி என்பது பெரிய அளவில் இருக்கும். அவர்களுக்கு என்னதான் தினமும் திருஷ்டி கழித்தாலும் அவர்கள் அதிலிருந்து விடுபட முடியாத நிலை இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளிக்கும் பொழுது நிச்சயம் அவர்களை சுற்றி உள்ள தீய சக்திகளும் எதிர்மறை ஆற்றல்களும் கண் திருஷ்டிகளும் விலகும்.
4. ஆரோக்கிய ரீதியாகவும் நாம் குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளிக்கும் போது நமக்கு ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கிறது. அதாவது கல் உப்பில் உள்ள தாதுக்கள் தசை வலி மற்றும் உடல் இறுக்கத்தை குறைக்கிறது.
அதனால் வாஸ்து சாஸ்திரப்படி இரவு நேரங்களில் குளிக்கும் பொழுது கல் உப்பு கலந்து குளித்தால் அன்றைய நாள் முழுவதும் களைப்புடன் இருக்கக்கூடிய நம் உடலில் சோர்வு நீக்கி ஒரு நல்ல உறக்கத்தை நமக்கு கொடுக்கிறது.
5.ஜோதிட சாஸ்திரப்படி ஒருவர் குளிக்கும் நீரில் உப்பு கலந்து குளிக்கும் பொழுது அவர்களுக்கு ராகுவினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் குறைகிறது. இதனால் மன பயம் குழப்பம் ஆகியவை குறைந்து ஒரு நல்ல தெளிவான மனநலையை தருகிறது.
6. அதேபோல் ஜாதகத்தில் குரு தோஷம் இருப்பவர்களும் தினமும் குளிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குளித்தால் மிகவும் மங்களகரமான மாற்றத்தை அவர்களுக்கு உண்டு செய்யும். அதோடு குரு தோஷமும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |